ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Karthigai Deepam Special : 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற இன்ஸ்டன்ட் ஸ்வீட் அப்பம் செய்ய ரெசிபி.!

Karthigai Deepam Special : 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற இன்ஸ்டன்ட் ஸ்வீட் அப்பம் செய்ய ரெசிபி.!

இன்ஸ்டன்ட் ஸ்வீட் அப்பம்

இன்ஸ்டன்ட் ஸ்வீட் அப்பம்

Karthigai Deepam 2022 | அப்பத்தை நேரடியாக எண்ணெயில் பொறித்து எடுக்கலாம், இல்லையெனில் குழிப்பனியார சட்டியில் தாராளமாக எண்ணை ஊற்றி பனியாரம் போலும் சுட்டு எடுக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு இனிப்பு பண்டங்கள் செய்வது முக்கியம்.அதில் முக்கியமான இனிப்பு வகைகளில் ஒன்று ஸ்வீட் அப்பம்.

இந்த ஸ்வீட் அப்பம் திகட்டாத அளவான இனிப்பு சுவையுடன் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.பஞ்சு போன்ற இந்த ஸ்வீட் அப்பத்தை 10 நிமிடத்தில் செய்ய ஈஸி ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்

கோதுமை மாவு - 1 கப்

வெல்லம் - 1 கப்

தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

வாழைப்பழம் - 1

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

- கோதுமை மாவு, அரிசி மாவு, துருவிய வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய் பொடி, துருவிய தேங்காய், 1 சிட்டிகை உப்பு அனைத்தையும் கொடுக்கப்பட்ட அளவில் எடுத்து நன்கு மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும்.

- பிறகு எண்ணெயை காய வைத்து பொறித்து எடுத்து அதன் மீது நெய்யை ஆங்காங்கே தடவினால் 10 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் ஸ்வீட் அப்பம் ரெடி.!

கூடுதல் குறிப்பு :

அப்பத்தை நேரடியாக எண்ணெயில் பொறித்து எடுக்கலாம், இல்லையெனில் குழிப்பனியார சட்டியில் தாராளமாக எண்ணை ஊற்றி பனியாரம் போலும் சுட்டு எடுக்கலாம்.

First published:

Tags: Karthigai Deepam, Sweet recipes, Sweets