கர்நாடகாவில் மஞ்சள் தர்பூசணி பழத்தை விளைவித்த இளம் விவசாயி!

மஞ்சள் தர்பூசணி பழத்தை விளைவித்த இளம் விவசாயி

தர்பூசணிகளில் உள்ள அபரிமிதமான நீர்ச்சத்து உங்களை உடனடியாக ஹைட்ரேட் செய்ய உதவும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் ஆரம்பக்கட்டத்திலேயே 100 டிகிரி அளவிற்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் அதிக வெப்பம் நிலவுவதால் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மோர், பழரசம், வெள்ளரி, கம்பங்கூழ், தர்பூசணி, பதநீர், நுங்கு ஆகியவற்றை பொதுமக்கள் நாடி செல்கின்றனர். குறிப்பாக தற்போது தர்பூசணி பழ சீசன் என்பதால், குறைந்த விலையில் கிடைக்கிறது.

தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இந்த பழத்தை கோடையில் சாப்பிட்டால் உடலை உடனடியாக புத்துணர்ச்சியுற செய்யும். தர்பூசணிகளில் உள்ள அபரிமிதமான நீர்ச்சத்து உங்களை உடனடியாக ஹைட்ரேட் செய்ய உதவும். பொதுவான தர்பூசணி பச்சை நிறமாகவும், அதன் உட்புறத்தில் சிவப்பு நிறமும் இருக்கும்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய மஞ்சள் நிற உயர் ரக தர்பூசணியை விவசாயி ஒருவர் விளைவித்துள்ளார். தற்போது இந்த மஞ்சள் நிற தர்பூசணியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த ஒரு பசவராஜ் பாட்டீல் என்ற இளம் விவசாயி கர்நாடகாவின் கலாபுராகியில் உள்ள கோரல்லி கிராமத்தில் உள்ள தனது வயலில் 'மஞ்சள் தர்பூசணி'யை பயிரிட்டு அறுவடையும் செய்துவிட்டார். இந்த இளம் விவசாயி மஞ்சள் தர்பூசணிகளை தானே உருவாக்கியுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி தளம் தெரிவித்துள்ளது. இந்த வகை தர்பூசணி பழங்கள் அவை வெளியில் இருந்து பார்க்கையில் பச்சை நிறமாகத் தோன்றுகின்றன, இருப்பினும் திறந்தவுடன் பிரகாசமான மஞ்சள் சதை பகுதியில் காட்சியளிக்கிறது.இதுகுறித்து பேசிய விவசாயி பாட்டீல், இந்த மஞ்சள் நிற தர்பூசணிகள் உண்மையில் சிவப்பு தர்பூசணிகளை விட சுவையில் இனிமையானவை என்றார். இதனை விளைவிக்க நான் ரூ.2 லட்சம் முதலீடு செய்தேன், தற்போது சுமார் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான லாபம் ஈட்டியுள்ளேன், எனது விற்பனையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் தனது பயிர்களை விற்பனை செய்வதற்காக உள்ளூர் மார்ட்கெட் மற்றும் பிக் பஜார் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளார், இது அவருக்கு லாபத்தையும் ஈட்டி தருவதாக கூறினார்.

இந்த தர்பூசணியின் புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்துள்ள நிலையில், ஏராளமானோர் இதுகுறித்து கேள்வி எழுப்பி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அவற்றில் சில,
மஞ்சள் நிற தர்பூசணி விதைகளை, நவீன முறையில் பாலித்தீன் பேப்பரை கொண்டு நிலப்போர்வையாக போர்த்தி நடவு செய்துள்ளார். நடவு செய்த 60 நாட்களில், தர்பூசணி நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யப்பட்டு விற்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: