முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை செய்ய ரெசிபி...

காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை செய்ய ரெசிபி...

ப்ரான் ஃப்ரை

ப்ரான் ஃப்ரை

prawn pepper fry | சுவையான காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ள்லாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம். இந்த பதிவில் சுவையான இறால் மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 கிலோ

வெங்காயம் - 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 1-2

குடைமிளகாய் - 1 (நறுக்கியது)

கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும். அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை போட்டு 1 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.

3. பின்பு அதே வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு மற்றும் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், இறால் பெப்பர் ப்ரை தயார்.

First published:

Tags: Prawn Recipes