karadaiyan nonbu | சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க மாசி மாதத்தின் இறுதியும், பங்குனி மாதத்தின் முதல் தேதியிலும் சாவித்திரி நோன்பு என்னும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பின் போது பெண்கள் நெய்வேத்தியத்திற்காக காரம் அல்லது இனிப்பு அடையை செய்வது வழக்கம். இந்த வருட காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14 ஆம் தேதி வருகிறது.
பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது.
தேவையான பொருட்கள்
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் - அரை கப் வெல்லம்
1 கப் ஏலக்காய் தூள்
1 டீ ஸ்பூன் தண்ணீர் 2 கப்
செய்முறை:
முதலில் காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள" என்று கொதிக்கும்போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்து வைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான காரடையான் நோன்பு ரெடி...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.