Home /News /lifestyle /

சத்து நிறைந்த கம்பு பாயாசம் செய்வது எப்படி தெரியுமா?

சத்து நிறைந்த கம்பு பாயாசம் செய்வது எப்படி தெரியுமா?

கம்ப்ய் பாயாசம்

கம்ப்ய் பாயாசம்

Payasam: நம் உணவுப் பாரம்பரியத்தில் சிறுதானியங்களுக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. அதிலும், கம்பும் (Bajra) தமிழர் வாழ்வியலில் முக்கியமான இடம் பிடித்திருப்பவை. இதில் சுவையான பாயாசம் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    குழந்தைகளுக்கு பாயாசம் செய்து கொடுக்க விரும்பினால் சத்தான கம்பு சேர்த்து பாயாசம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த கம்பு பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    கம்பு மாவு - 1 கப்,

    தண்ணீர் - 4 கப்,

    பால் - 2 லிட்டர்,

    பனங்கற்கண்டு - 2 கப்,

    ஏலக்காய்த்தூள் - 10 கிராம்,

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,

    முந்திரி - 50 கிராம்,

    திராட்சை - 25 கிராம்,

    தேங்காய்த்துருவல் - 20 கிராம்

    கம்பு பாயாசம்


    செய்முறை

    ஒரு அடிகனமான கடாயில் கம்பு மாவை தண்ணீர் விட்டு கரைத்து, மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை காய்ச்சி இறக்கி ஆறவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பால், ஏலக்காய்த்தூள், பனங்கற்கண்டு, கம்பு மாவு கலவையை சேர்த்து கிளறி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்த்துருவல் ேசர்த்து இறக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

    குறிப்பு: சர்க்கரையை தவிர்க்க நினைப்பவர்கள் கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Food, Sweet recipes

    அடுத்த செய்தி