• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கலா மாஸ்டர் மட்டன் சுக்கா வச்சா ஊரே மணக்குமாம்!

கலா மாஸ்டர் மட்டன் சுக்கா வச்சா ஊரே மணக்குமாம்!

கலா மாஸ்டர்

கலா மாஸ்டர்

பிரியாணி மற்றும் மட்டன் சுக்கா என்றால் அவரின் கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் பயங்கர ஃபேவரெட்டாம்.

  • Share this:
    கலா மாஸ்டர் டான்ஸல மட்டுமில்லை சமையலிலும் கில்லி தான். அந்த வகையில் இன்று அவரின் ஸ்பெஷல் டிஷ் மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    மானாட மயிலாட கலா மாஸ்டருக்கு தனியாக ஒரு பெரிய ஃபேன்ஸ் ஃபாலோவே உண்டு. இன்று பீக்கில் இருக்கும் ஏகப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சியிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்ச்சி என்றால் அது மானாட மயிலாட நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எல்லோருமே இன்று வேற லெவலில் ரீச் ஆகி சின்னத்திரை, வெள்ளித்திரையில் பிஸியாக இருக்கிறார்கள். அன்று கலா மாஸ்டர்,  திறமையை நம்பி அவர்களுக்கு தந்த வாய்ப்பு இன்று அவர்கள் எங்கு சென்றாலும் முதலில் அடையாளப்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சியாக மாற்றி கொடுத்ததுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி ஆல்யா மானசா, சாண்டி மாஸ்டர், நீபா இப்படி ஏகப்பட்ட பிரபலங்கள் கெரியரை தொடங்கியது இங்கு தான்.

    கலா மாஸ்டர் சின்ன பிரேக் எடுத்ததும் நிகழ்ச்சியும் கைவிடப்பட்டது. இந்நிலையில் குடும்பம், பர்சனல் கெரியர் என பிஸியாக இருக்கும் கலா மாஸ்டர் சமையலிலும் பயங்கரமாக அசத்துவாராம். அவர் செய்யும் கேரளா ஸ்டைல் பிரியாணி மற்றும் மட்டன் சுக்கா என்றால் அவரின் கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் பயங்கர ஃபேவரெட்டாம். அந்த ஸ்பெஷல் மட்டன் சுக்கா ரெசிபியை எப்படி செய்வதென்று இங்கே பார்க்கலாம் வாருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளலாம். மட்டன், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய், சிவப்பு மிளகாய், பெப்பர் தூள், வெங்காயம், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள். இஞ்சி பூண்டு விழுது. இப்போது செய்முறை. முதலில் குக்கரில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். மட்டன் நன்கு வெந்ததும் அதை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை சேர்த்து, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.



    வெங்காய நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து தேவையான அளவு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், பெப்பர் தூள், தனியா தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் எண்ணெய்யில் நன்கு சுக்கா பதத்திற்கு வறுக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மட்டன் சுக்கா ரெடி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: