Home /News /lifestyle /

New Year Recipe : வீட்டிலேயே காஜு கட்லி செய்ய ரெசிபி : விருந்தினர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்

இனிப்பு பிரியர்களின் டாப்இனிப்பு வகைகளில் காஜு கட்லி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். பெரும்பாலும் காஜு கட்லியை இனிப்பு பிரியர்கள் ஸ்வீட் கடைகளிலேயே ஆர்டர் செய்து உண்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் மிக சுலபமாக செய்து விடலாம். மிக எளிமையான செய்முறையைக் கொண்ட இவை செய்வதற்கும் மிகக்குறைந்த நேரம் மட்டுமே பிடிக்கும். அது மட்டுமின்றி இதை செய்வதற்கும் மிக குறைவான பொருட்களே தேவை.

மேலும் படிக்கவும் ...
காஜு கட்லியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த புத்தாண்டுக்கு வீட்டிலேயே காஜு கட்லி செய்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

முந்திரி – 1 கப்

சர்க்கரை – 1 / 2 கப்

தண்ணீர் – 1 / 4 கப்

செய்முறை

முதலில் முந்திரி பருப்பை வெறும் கடாயில் போட்டு மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். பின்னர் சர்க்கரை பாகில் கொஞ்சம் கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறவும். நன்றாக கிளறி கொண்டே இருந்தால் சேர்ந்து வரும்.

ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவு கலவையை கொட்டி நன்றாக பிசையணும். சப்பாத்தி மாவு மாதிரி வரும். நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இட்டு துண்டுகள் போட வேண்டும். இப்போது தித்திப்பான காஜு கட்லி ரெடி.

மேலும் படிக்க... தினை வைத்து ஆரோக்கியமான முறையில் குக்கீஸ் செய்ய டிப்ஸ்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Sweet recipes

அடுத்த செய்தி