சியா விதைகள் ஒமேகா 2 கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. எனவே உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் சியா விதைகளை தங்களது உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் தென்னிந்தியாவின் பிரபல நடிகையான காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சியா சீட்ஸ் புட்டிங் பற்றிய போட்டோவை பகிர்ந்திருந்தார். சியா சீட்ஸ் புட்டிங் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகும். ஒரு கிண்ணம் சியா சீட்ஸ் புட்டிங்கில் புரதம், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
அத்துடன் தனது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த சியா சீட்ஸ் புட்டிங் ரெசிபியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் பசையம் இல்லாத கிரானோலா, கேரமலைஸ் செய்யப்பட்ட வாழைப்பழம், தேங்காய் பால் மற்றும் வீகன் தயிர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சியா விதைகளில் அடங்கியுள்ள சத்துக்கள்:
இரண்டு டீஸ்பூன் சியா விதைகளில் (சுமார் 28 கிராம்)
புரதம் - 4.7 கிராம்
ஒமேகா -3 - 5 கிராம்
நார்ச்சத்து - 9.8 கிராம்
பாஸ்பரஸ், மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
காஜல் அகர்வலால் உங்கள் சுவை நரம்புகள் தூண்டப்பட்டிருந்தால், உடனே முயற்சி செய்து பார்க்க பயனுள்ள சில சியா சீட்ஸ் புட்டிங் வகைகளை இங்கே கொடுத்துள்ளோம்.
1. சியா சீட்ஸ் புட்டிங்:
இந்த எளிதான மற்றும் சூப்பர் ஆரோக்கியமான சியா சீட்ஸ் புட்டிங்கை தயாரிக்க தேவையான அளவு சியா விதைகளை இரவே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறவைக்கப்பட்ட சியா விதைகளுடன் உங்களுக்கு விரும்பமான அல்லது சீசன் பழங்களை சேர்த்தால் சுவையான சியா சீட்ஸ் புட்டிங் தயார்.
சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...
2. ஆப்பிள் சியா சீட்ஸ் ஸ்மூத்தி:
சில துண்டு ஆப்பிள் மற்றும் தயிரை மிக்ஸியில் ஒன்றாக சேர்ந்து அரைத்து கொள்ளுங்கள், அத்துடன் ஒரு ஸ்பூன் பீனட் பட்டர், சிறிதளவு ஊறவைத்த சியா விதைகளை சேர்ந்தால், காலையில் ஆரோக்கியமான உணவு தயார்.
3. வாழைப்பழம் மற்றும் பாதாம் கஞ்சி:
காலை உணவுக்கு ஒரு கிண்ண கஞ்சி சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்கும் என்றால் இதனை முயற்சித்து பார்க்கலாம். இனிப்பில்லாத பாதம் பால், வாழைப்பழம், ஓட்ஸ், தேன் ஆகிவை தேவை. அடிகனமான பாத்திரத்தில் பாதம் பாலை ஊற்றி, ஓட்ஸ் கலந்து நன்றாக கிளறவும். அதன் பின்னர் குறைந்த தீயில் மசித்த வாழைப்பழம் மற்றும் தேன் ஆகியவற்றை கலக்கவும். இந்த காலை உணவு மீது சியா விதைகளை தூவுவதன் மூலமாக ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம். தேனுக்கு பதிலாக பீனட் பட்டரையும் முயற்சிக்கலாம்.
4. ஓட்ஸ்மீல் பவுல்:
பாலில் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் உடன் பீனட் பட்டர், வாழைப்பழ துண்டுகள், சியா விதைகள் சேர்க்கப்பட்ட ஓட்ஸ்மீல் பவுல், பசியை கட்டுப்படுத்தக்கூடிய சிறப்பான காலை உணவு ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.