Home /News /lifestyle /

ஒருமுறை கார சட்னி இப்படி செய்து பாருங்கள்.. வீட்டில் இருப்பவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்!

ஒருமுறை கார சட்னி இப்படி செய்து பாருங்கள்.. வீட்டில் இருப்பவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்!

கார சட்னி

கார சட்னி

கார சட்னியில் பலவகையுண்டு. தேங்காய் சேர்த்து அரைப்பது, ரெட் கார சட்னி, மிளகாயை தனியாக அரைத்து வைக்கும் சட்னி, ஆந்திரா ஸ்டைல் கார சட்னி என சொல்லிக்கொண்டே போகலாம்.

    தோசைக்கு மற்ற எல்லா சட்னியை விடவும் கார சட்னி பெஸ்ட் காம்போ என்றே சொல்லலாம். கார சட்னியில் பலவகையுண்டு. தேங்காய் சேர்த்து அரைப்பது, ரெட் கார சட்னி, மிளகாயை தனியாக அரைத்து வைக்கும் சட்னி, ஆந்திரா ஸ்டைல் கார சட்னி என சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் ஹோட்டல் ஸ்டைல் கார சட்னியை எடுத்து கொண்டால் அதன் நிறம், டேஸ்ட், செய்முறை எல்லாமே மாறுபடும். ரோட்டு கடை கார சட்னி டோட்டலா வேற மாதிரி இருக்கும். எதிலுமே டேஸ்டில் எந்த குறையும் இருக்காது. குறிப்பாக ஆண்கள் இந்த ரோட்டுக்கடை சட்னி வகைகளை விரும்பி சாப்பிடுவதை அதிகம் கவனிக்க முடிகிறது. சில ரோட்டுக்கடையில் இன்னமும் அம்மியில் தான் சட்னி அரைப்பதாக சிலர் கூறுகின்றனர். அதுதான் சட்னியின் டேஸ்டுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

    அந்த வகையில் இன்றைய பதிவில் பார்க்க போவதும் ரோட்டுக்கடை ரெட் சட்னி. இதை இட்லி, பொங்கல், தோசைக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த சட்னி ரெசிபி வீடியோ இந்தியன் ரெசிபீஸ் தமிழ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் செய்முறையை இப்போது விரிவாக பார்க்கலாம்.

    கல்யாண வீட்டு வத்தக்குழம்பு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!

    தேவையான பொருட்கள்:

    தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கடலை பருப்பு, உளுந்து, எண்ணெய்.

    செய்முறை:

    1. முதலில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்க வெண்டும்.

    2. பின்பு அதனுடன் கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    3. இப்போது பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி அதனுடன் தேவையான அளவு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

    மிளகு குழம்பு ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட்!

    4. சேர்த்த பொருட்கள் எல்லாம் நிறம் மாறி பொன்னிறமாக வந்தவுடன் அதில் உப்பு சேர்க்க வேண்டும்.

    5. பின்பு இவற்றுடன் சிறிதளவு தணீர் சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும்.



    6. அரைத்த பின்பு மீண்டும் அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து அந்த தாளிப்பை சட்னியுடன் சேர்க்க வேண்டும்.

    7. அவ்வளவு தான் சூப்பரான ரெட் கார சட்னி தயார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Breakfast, Chutney, Food recipes

    அடுத்த செய்தி