Home /News /lifestyle /

சூப்பரான காடை முட்டை குழம்பு செய்வது எப்படி?

சூப்பரான காடை முட்டை குழம்பு செய்வது எப்படி?

காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பராக இருக்கும்.   காடை முட்டையில், குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள் :

காடை முட்டை – 20

எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 1

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

தக்காளி – 2 (விழுதாக அரைத்தது)

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்

நீர் – தேவையான அளவு

கொத்த மல்லித்தழை – தேவையான அளவு

செய்முறை

முதலில் தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும். மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும் அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். காடை முட்டை குழம்பு ரெடி...

மேலும் படிக்க... கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த ஜூஸ்களை குடியுங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Egg recipes, Food

அடுத்த செய்தி