முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஜில்லுனு காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்... இதை ட்ரை பண்ணுங்க...

கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஜில்லுனு காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்... இதை ட்ரை பண்ணுங்க...

சாலட்

சாலட்

summer salad | காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. தினமும் வெறும் ப்ரூட் சாலட் சாப்பிட்டு வெறுப்புடன் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான ரெசிபி வேறு ஒரு சுவையான உணவாக அமையும். இந்த சம்மருக்கு இதை ட்ரை பண்ணி பாருங்கள்...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்களது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்து இருக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு சாலட்டை சாப்பிடலாம். அதிலும் இந்த கோடைக் காலத்திற்கு ஏற்ற குளிச்சியான காய்கறி மற்றும் ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்-ஐ சாப்பிட்டால் உடல் சூடு தணியும். இந்த  சாலட்-ஐ செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ், வெள்ளரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம், ஆப்பிள், கொய்யா, திராட்சை , ஆரஞ்சு , மாதுளம், மிளகு, தேன், எலுமிச்சை ஆகிவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை :

1. முதலில் தக்காளியை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய், கொய்யா, திராட்சை , ஆரஞ்சு மற்றும் ஆப்பிளை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

2. அத்துடன் முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.

Also see... மாவடு ஊறுகாய்.. நொடியில் செய்ய ரெசிபி..!

3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், பழங்களை ஒன்றாக போட்டு அதனுடன் மிளகு தூள், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது குளிர்ச்சி தரும் காய்கறி-ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் ரெடி.

4. இந்த சாலட் உண்பதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். உடலை குளிர்ச்சிப்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

First published:

Tags: Summer Food, Summer Fruits