முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி?

பலாப்பழம் பாயாசம் செய்வது எப்படி?

பலாப்பழம் பாயாசம்

பலாப்பழம் பாயாசம்

Jackfruit Payasam | கேரளாவில் பலாப்பழ பாயாசம் மிகவும் பிரபலம். நாம் இதை எப்படி எளிய முறையில் செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு விருந்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது பாயாசம்தான். சர்க்கரை நோயாளிகள்கூட கொஞ்சம் பாயாசத்தை ருசித்துப் பார்க்கவே விரும்புவார்கள். தமிழகத்தில் விருந்தில் தவறாது இடம் பெறும் பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். அத்தகைய பாயாசத்தை பலாப்பழம் கொண்டு செய்தால் எப்படி இருக்கும்?

தேவையான பொருட்கள் :

பலாப்பழம் - 20

தேங்காய் பால் - 2 கப்

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் - 6 (பொடி)

முந்திரி - தேவையான அளவு

பிஸ்தா - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை :

1. முதலில் பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும். ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.

3. பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவும்.

Also see... சுவையான பலாக்காய் குழம்பு செய்ய ரெசிபி...

4. பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இனிப்பான பலாப்பழம் பாயாசம் ரெடி.

First published:

Tags: Jack Fruit, Payasam