Home /News /lifestyle /

பலாக்கொட்டை மற்றும் பசலைக்கீரையை வைத்து சாம்பார் : அற்புதமான சுவையில் ரெசிபி..!

பலாக்கொட்டை மற்றும் பசலைக்கீரையை வைத்து சாம்பார் : அற்புதமான சுவையில் ரெசிபி..!

பலாக்கொட்டை மற்றும் பசலைக்கீரையை வைத்து சாம்பார்

பலாக்கொட்டை மற்றும் பசலைக்கீரையை வைத்து சாம்பார்

Jack fruit And Spinach Sambar Recipe : கோடையில் தேன் சுவை மிகுந்த பலாப்பழமும் மக்களின் அதீத விருப்பமாக இருக்கும். அப்படி பலாப்பழம் சாப்பிட்டால் அதன் கொட்டையை நாம் தூக்கி எறிய மாட்டோம். அதை வைத்து அருசுவை உணவையும் செய்வோம்.

கோடைக்காலம் வந்துவிட்டாலே பருகால பழங்களும் வந்துவிடும். அந்த வகையில் கோடையில் தேன் சுவை மிகுந்த பலாப்பழமும் மக்களின் அதீத விருப்பமாக இருக்கும். அப்படி பலாப்பழம் சாப்பிட்டால் அதன் கொட்டையை நாம் தூக்கி எறிய மாட்டோம். அதை வைத்து அருசுவை உணவையும் செய்வோம். அப்படி அந்த பலாக்கொட்டைகளை வைத்து சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1/2 கப்
பசலைக்கீரை - 1 கப்
பலாக்கொட்டை - 1 கப்
முருங்கைக்கீரை - 1 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
தேங்காய் துருவியது - 1/4 கப்
சாம்பார் பொடி - 2 1/2 tbsp
கடுகு - 1 tsp
வெந்தயம் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 1 tbsp
புளி தண்ணீர் - 2 tsp
தக்காளி - 2
உப்பு - தே.அ
தண்ணீர் - தே.அ



செய்முறை :

குக்கரில் துவரம் பருப்பு மற்றும் பலாக்கொட்டையை போட்டு - 3 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள். தனித்தனியாகவும் வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம்.

பருப்பு விசில் வந்ததும் பலாக்கொட்டைகளை தனியாக எடுத்து வைத்துவிட்டு பருப்பை மட்டும் கடைந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து துருவிய தேங்காய், சாம்பார் பொடி சேர்த்து வதக்கி அதை மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

குழம்புக்கு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் தக்காளி குழைய வதக்கிக்கொள்ளுங்கள்.

பிரெட்டும் பாலும் இருந்தா இப்படியொரு ரெசிபி செஞ்சிடலாமா..? நாவூற வைக்கும் அருமையான டெசர்ட்..!

பின் முருங்கைக்காய் , பசலைக்கீரை( நன்கு பொடியாக நறுக்க வேண்டும்) சேர்த்து வதக்குங்கள். இப்போது அரைத்த விழுதை சேர்த்து வதக்கி புளி தண்ணீரை ஊற்றுங்கள்.

அது கொதி நிலை வரும்போது பருப்பு மற்றும் பலாக்கொட்டையை சேர்த்து கலந்துவிடுங்கள்.

நன்கு கொதித்ததும் மற்றொரு பக்கம் தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாரில் கொட்டுங்கள்.

இப்போது நன்கு கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள்.

அவ்வளவுதான் பலாக்கொட்டை மற்றும் பசலைக்கீரை சாம்பார் தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Jack Fruit, Sambar Recipe, Spinach

அடுத்த செய்தி