Home /News /lifestyle /

இத்தாலியன் பாஸ்தா வீட்டிலேயே செய்வது எப்படி?

இத்தாலியன் பாஸ்தா வீட்டிலேயே செய்வது எப்படி?

பாஸ்தா

பாஸ்தா

Italian Pasta | பாஸ்தா ஒரு டிபன் மற்றும் மாலை நேர உணவு வகையாகும். மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக இருக்கிறது. இந்த பதிவில் பாஸ்தா எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

    பாஸ்தா ஒரு டிபன் மற்றும் மாலை நேர உணவு வகையாகும். மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக இருக்கிறது. இந்த பதிவில் பாஸ்தா எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

    தேவையானவை

    பாஸ்தா - ஒரு கப்

    பூண்டு - 2 பற்கள்

    பேசில் தழை – 4

    உப்பு – தேவைக்கு

    வெங்காயம் - ஒன்று

    சிகப்பு பழுத்த மிளகாய் - 3

    ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி - தலா 2 சிட்டிகை

    துருவிய மொசரேல்லா சீஸ் - 4 தேக்கரண்டி

    தக்காளி - 200 கிராம்

    மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி

    ஆலிவ் ஆயில் - கால் தேக்கரண்டி

    தேன் - கால் தேக்கரண்டி


    செய்முறை

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் பாஸ்தாவைப் போட்டு பிசுபிசுப்பு இல்லாமல் பதமாக வேக வைக்கவும். பின்பு வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் மூழ்க விட்டு எடுத்து ஆற விடவும்.

    தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கி விட்டு கூழாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், கூழாக்கிய தக்காளி, தேன், மிளகுத் தூள், ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.

    மேலும் படிக்க... Betel Leaf : வெற்றிலையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

    அதனுடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும். பாஸ்தாவைப் பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாகப் பரிமாறலாம். இப்போது சுப்பரான இத்தாலியன்பாஸ்தா ரெடி.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Food, Italy

    அடுத்த செய்தி