கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதற்குள் பறவைக் காய்ச்சல் தொற்றும் அடுத்த எச்சரிக்கையாக வந்துவிட்டது. பறவைகள் மூலம் நேரடியாக மனிதருக்குப் பரவும் இந்நோய் தீவிர அறிகுறிகளைக் கொண்டுள்ளது. தற்போது இமாச்சலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமாகியுள்ளது.
அதேபோல் இந்த பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு மனிதன் தொற்றை ஏற்படுத்துமா என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் பறவைகளுடனான நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட பறவைகளை சாப்பிடுவதன் மூலமாகவோ மனிதர்களுக்கு தொற்று பரவும். எனவே இந்த சமயத்தில் கோழி, வாத்து போன்ற பறவை வகை இறைச்சி உணவுகள், அவை இடும் முட்டைகளையும் சாப்பிடலாமா என்னும் பயம் நிலவி வருகிறது. அதைப் பற்றிய தெளிவு கொடுக்கவே இந்தக் கட்டுரை.
அறிவியல் ரீதியாக அணுகும்போது முட்டை, சிக்கன் வழியாக பறவைக் காய்ச்சல் பறவும் என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. உலக சுகாதார அமைப்பின் படி எந்த ஒரு இறைச்சி வகையையும், நன்கு சுத்தம் செய்து தீயில் சமைக்கும்போது எப்படிப்பட்ட கிருமிகள், வைரஸுகள் அழிந்துவிடும் என்று கூறுகிறது. இருப்பினும் இந்த சூழ்நிலையில் கூடுதல் கவனத்துடன் அவற்றை நன்கு சுத்தம் செய்து அடுப்பின் தீயில் வேக வைத்து சாப்பிட வேண்டும். அதேபோல் நீண்ட நாட்களுக்கு ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைக்காமல் ஃபிரெஷாக வாங்கி வந்து அப்போதே சமைத்து சாப்பிடுவது நல்லது.
வல்லுநர்களின் கூற்றுப்படி இறைச்சியை 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள கிருமிகள் அழியும். சிக்கனை தண்ணீரில் கழுவிய பின்பும் அதை டிஷ்யூ பேப்பர் கொண்டு நன்கு துடைத்துவிட்டு சமைப்பதே நல்லது என்கின்றனர்.
முட்டை வாங்கும்போதும் அது சுத்தமாகவும், புதிய முட்டையாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். அதேபோல் நீங்கள் வாங்கி வந்த முட்டையை வேக வைக்கும்போது ஓட்டிலிருந்து முட்டை கசிந்து வெளியே வந்தாலும் சமைக்காதீர்கள்.
இந்த சமையத்தில் ரெஸ்டாரண்ட் , ஹோட்டல் என வெளிப்புற சிக்கன், முட்டை உணவுகளை தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களின் அதன் தரத்தை நம்மால் கனிக்க இயலாது என்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.