Home /News /lifestyle /

கோடை காலத்தில் இஞ்சி சாப்பிடுவது நல்லதா..? எவ்வளவு இஞ்சி உட்கொள்வது ஆரோக்கியமானது..?

கோடை காலத்தில் இஞ்சி சாப்பிடுவது நல்லதா..? எவ்வளவு இஞ்சி உட்கொள்வது ஆரோக்கியமானது..?

இஞ்சி

இஞ்சி

ஞ்சி ஒரு சூடான மசாலா பொருள் ஆகும், இது ஒரு வலுவான சுவை மற்றும் வாசனையைக் கொண்டுள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த மருத்துவ மசாலாவாகப் பயன்படுத்தப்படுகிறது, இதை கொண்டு தொண்டை புண், சளி இருமல் மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தும் பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
உங்களுக்கு இஞ்சி என்றால் மிகவும் பிடிக்குமா? இஞ்சி டீ அல்லது காரமான இஞ்சி ஊறுகாயாக அல்லது சாலட்களில் தூவப்படும் பச்சை இஞ்சி என எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? ஆம் என்றால், இக்கட்டுரையை சற்று நிதானித்து படிக்கவும்!

இஞ்சி ஒரு எளிமையான மசாலாப் பொருளாகும், இது சமையலுக்கும், பானங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் மருந்துகளில் கூட பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்களின் கலவையாக திகழ்ந்தாலும் கூட இந்த இயற்கையான மசாலாவில் சில மறைக்கப்பட்ட பக்க விளைவுகளும் உள்ளன என்று நாங்கள் உங்களுக்கு சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்; இஞ்சியை உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக இந்த கொளுத்தும் வெயில் காலத்தில்!

இஞ்சி ஆரோக்கியமானதா?

இஞ்சி ஒரு ரூட் ஸ்பைஸ் (வேர் வகை மசாலா) ஆகும், இது ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், தாதுக்கள் மற்றும் வைட்டமின்களால் நிறைந்துள்ளது, இவைகள் வலுவான மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளுக்கு எதிராக எதிர்ப்பை உருவாக்கவும், செரிமானத்திற்கு சிறந்ததாகவும் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் ஆனது இஞ்சியில் நிரம்பி வழிகிறது. எப்படி பார்தாலும் இஞ்சி மிகவும் ஆரோக்கியமானது தான், ஆனால் கோடையில் இதை உட்கொள்வது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ!



கோடையில் இஞ்சி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

இஞ்சி ஒரு சூடான மசாலா பொருள் ஆகும், இது ஒரு வலுவான சுவை மற்றும் வாசனையைக் கொண்டுள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த மருத்துவ மசாலாவாகப் பயன்படுத்தப்படுகிறது, இதை கொண்டு தொண்டை புண், சளி இருமல் மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தும் பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் இது நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

சமையலில் தவறுதலாக மஞ்சள் அதிகமாக சேர்த்து விட்டீர்களா..? உடனே சரி செய்யும் டிப்ஸ்..!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இஞ்சி உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது கோடை காலத்தில் வியர்வையை உற்பத்தி செய்து உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்கிற காரணத்தின் கீழ் நீங்கள் இஞ்சியை சாப்பிடலாம்; அது ஒரு நல்ல செய்தி தான். இருப்பினும், ஒருவர் ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் இஞ்சியை எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் அதிகப்படியான இஞ்சி உட்கொள்ளல் சில பெரிய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.



இஞ்சியின் மறைக்கப்பட்ட பக்க விளைவுகள்:

இஞ்சி செரிமானத்திற்கு சிறந்தது, ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது உடலில் அமில உருவாக்கத்தை அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில், உணவுகளில் இஞ்சியை குறைவாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது, மேலும் பிரசவ தேதியில் இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது இரத்தப்போக்குக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் அல்லது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம். அறுவை சிகிச்சையின் போது, ​​​​இஞ்சியை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இது அதிகப்படியான அல்லது திடீர் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். இஞ்சி, இரத்தம் உறைவதை குறைக்கிறது மற்றும் இரத்தப்போக்கு கோளாறுகளை மோசமாக்கும். சில சந்தர்ப்பங்களில் இஞ்சியை அதிகமாக உட்கொள்வது இதயத்தின் நிலையை கூட மோசமாக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Gingee

அடுத்த செய்தி