உடலுக்கு நீர்ச்சத்தை வாரி வழங்க கூடிய பழங்களில் தர்பூசணி பழம் முதன்மையானது. அதுவும் 92 சதவீத நீர்ச்சத்துடன் கோடை காலத்தில் கிடைப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்கின்றனர். சுட்டெரிக்கும் கோடையில் குளிர்ந்த மற்றும் நீர் நிறைந்த தர்பூசணியை சுவைப்பது குளுகுளுவென காற்றை அனுபவிப்பது போன்றது. தர்பூசணியை அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழும் ஒன்றாக உள்ளது.
கோடை காலத்தின் கொடையான தர்பூசணி பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகத்திற்கு தெளிவான விளக்கத்தை கீழே கொடுத்துள்ளோம்.
நீரழிவு நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா?
தர்பூசணியில் நீர் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. ஆனால் அது சற்று அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) கொண்டுள்ளது. 100 கிராம் தர்பூசணியில் ஜிஐ 72 ஆக உள்ளது. ஆனால் தர்பூசணியில் கிளைசெமிக் சுமை மிகக் குறைவாக இருப்பதால் 100 கிராமில் இரண்டு துண்டுகளை மட்டும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் 150 கிராம் தர்பூசணியை பாதுகாப்பாக சாப்பிடலாம், இது தினசரி அடிப்படையில் 1 கப் தர்பூசணிக்கு சமமாகும்.
சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை ஸ்நாக்ஸ் போல் குறைவாக சாப்பிடலாம், சாப்பாடு போல் அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவில் தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்கவும், உங்கள் உணவுக்கு முன் அல்லது பின் உடனடியாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை காலை சிற்றுண்டியாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.
தர்பூசணி பழத்தின் நன்மைகள்:
கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சியை பெற தர்பூசணி உதவுகிறது. தர்பூசணியில் வைட்டமின் சி, ஏ, பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன.
Bowl Method Diet பற்றி தெரியுமா..? உடல் எடையை வேகமாக குறைக்க இப்போ இதுதான் டிரெண்ட்..!
முடியின் வலிமையை அதிகரிக்கவும், சருமத்தை மிருதுவாக்கவும், சோர்வை போக்கி சுறுசுறுப்பாக்கவும் உதவும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் தர்பூசணி பழத்தில் அதிகமாக உள்ளது.
ஆயுர்வேதத்தின் படி, தர்பூசணி எடை இழப்புக்கு உதவுகிறது, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை (UTI) குணப்படுத்தவும், செரிமானத்திற்கம் உதவுகிறது.
நீரழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்ற பழங்கள்:
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பிளம், பீச், ஆப்பிள், பேரிக்காய், கிவி, ஜாமூன், ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் பப்பாளி ஆகியவை நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவில் பாதுகாப்பாக உட்கொள்ளக்கூடிய சில க்ளோ கிளைசெமிக் இன்டெக்ஸ் பழங்கள் ஆகும். இந்த பழங்கள் அனைத்தும் 60 அல்லது அதற்கும் குறைவான ஜிஐ கொண்டவை மற்றும் உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானவை.
முந்திரியை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்..? கெட்டுபோன முந்திரிகளை கண்டறிய டிப்ஸ்..!
தர்பூசணி மூலம் செய்யக்கூடிய ரெசிபிகள்:
தர்பூசணி பலவகையான பழங்களுடன் சேர்த்து புதுமையான ரெசிபிக்களை உருவாக்க உதவுகிறது. தர்பூசணியில் பாப்சிகல்ஸ், ப்ரூட் சர்பெட், ஸ்மூத்தி, ஜூஸ் என பல புத்துணர்ச்சி தரக்கூடிய ரெசிபிக்களை செய்ய முடியும். தர்பூசணி சாலட், தர்பூசணி காக்டெய்ல், தர்பூசணி சல்சா, தர்பூசணி ஐஸ்கிரீம், தர்பூசணி ஊறுகாய் என பல தனித்துவமான உணவு வகைகளையும் ரசித்து சமைத்து, ருசித்து சாப்பிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Watermelon