ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் என்ன..? ஆரோக்கியமான எண்ணெய் எது..?

சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் என்ன..? ஆரோக்கியமான எண்ணெய் எது..?


5.வெஜிடபிள் ஆயில்: சருமத்தில் தாவர எண்ணெய் எனப்படும் வெஜிடபிள் ஆயிலை பயன்படுத்துவதால் பலருக்கு சாதகமான முடிவுகளே கிடைத்தாலும், சிலர் எதிர்வினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதை மறுப்பதற்கு இல்லை. கூடுதலாக சுத்திகரிக்கப்படும் தாவர எண்ணெய்கள் ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்தப்படுகிறது. உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், குளிர் அழுத்தமூட்டப்பட்ட (cold-pressed) மற்றும் ஆர்கானிக் எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5.வெஜிடபிள் ஆயில்: சருமத்தில் தாவர எண்ணெய் எனப்படும் வெஜிடபிள் ஆயிலை பயன்படுத்துவதால் பலருக்கு சாதகமான முடிவுகளே கிடைத்தாலும், சிலர் எதிர்வினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதை மறுப்பதற்கு இல்லை. கூடுதலாக சுத்திகரிக்கப்படும் தாவர எண்ணெய்கள் ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்தப்படுகிறது. உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், குளிர் அழுத்தமூட்டப்பட்ட (cold-pressed) மற்றும் ஆர்கானிக் எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்துக் கொண்டால் சோர்வு மற்றும் உடல் நிலை சரியில்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். எண்ணெய் மூலம் கிடைக்கும் கொழுப்பு அவசியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடந்த 10 ஆண்டுகளில் இதய நோய் மற்றும் ரத்த அழுத்தங்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கனிசமான அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்வோர் மற்றும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக உணவில் எண்ணெய் சேர்த்துவதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணய்யை உணவில் பயன்படுத்துகின்றனர்.

உடல் எடையை குறைக்க பயிற்சி செய்பவர்கள் கூட எண்ணெய் இல்லாத உணவு டையட்டை பின்பற்றுவதை பார்க்க முடிகிறது. ஆனால், இது உண்மையா? எண்ணெய் இல்லாத உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதா? எண்ணெய் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கலாமா? என்ற சந்தேகமும் மக்களிடம் உள்ளது. இது குறித்து நிபுணர்கள் கூறும்போது உணவில் முற்றிலுமாக எண்ணெய்யை தவிர்ப்பது நல்லதல்ல என்கின்றனர்.

எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்துக் கொண்டால் சோர்வு மற்றும் உடல் நிலை சரியில்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். எண்ணெய் மூலம் கிடைக்கும் கொழுப்பு அவசியம். அவை மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் முறையாக இயங்க உதவுகின்றன. சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது அவசியம். சாலையோரக்கடைகள் உள்ள எண்ணெய் உணவுகளை வேண்டுமானால் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. ஒருவர் நாள்தோறும் 2-3 ஸ்பூன் நெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சாப்பிடுவது நல்லது. கடுகு எண்ணெய் மிகவும் சிறந்தது.

உணவில் எண்ணெய்யை ஏன் முற்றிலுமாக தவிர்க்கக்கூடாது?

எண்ணெய் இல்லாமல் உணவை உட்கொள்ளும்போது உடல் எடை குறையும், சோர்வு அதிகரிக்கும் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது. எண்ணெய் உணவுகள் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் முறையாக செயல்பட உறுதுணையாக இருக்கின்றன. அவை உடலுக்கு கிடைக்காதபோது மற்ற பிற உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஃபேட் டையட் (Fad Diet) பின்பற்றக்கூடாது ஏன்?

ஃபேட் டையட் என்பது குறுகிய காலத்துக்கு பின்பற்றக்கூடிய டையட்டுகளில் ஒன்று. விரைவாக எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், இந்தவகை டையட்டை பின்பற்றுவார்கள். நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, இந்த டையட்டை அதிக நாட்களுக்கு பின்பற்ற முடியாது. உடல்நல கோளாறுகளுக்கும் வழிவகுத்துவிடும்.

உணவின் சுவையை கூட்ட சேர்க்கப்படும் செயற்கை பொருட்களால் வரும் ஆபத்து பற்றி தெரியுமா..?

* சமையலுக்கு சிறந்த மூன்று எண்ணெய்கள்

1. ஆலிவ் எண்ணெய்

இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. ஆலிவ் எண்ணெயின் முதன்மை அமிலம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு ஆகும். இது ஒலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. கேன்சர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒலியோகாந்தல் மற்றும் ஒலூரோபீன் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த கொழுப்புகள் கெட்ட கொழுப்புகளைக் குறைத்துவிடும். உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் இந்த எண்ணெய்யை தாராளமாக பயன்படுத்தலாம்.

2. கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த எண்ணெய்யை ஒருமுறை அதிக சூட்டில் பயன்படுத்திவிட்டால், மறுமுறை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

3. நெய்

ஆன்டி ஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள், நல்ல கொழுப்புகள் நெய்யில் உள்ளன. அதேநேரத்தில் ஆரோக்கியமான கொழுப்பு இருக்கிறது என்பதற்காக அதிகளவில் எடுத்துக் கொள்ளவும் கூடாது. சீராக எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது. நெய்யில் இருக்கும் கொழுப்புகள் தாதுக்களை உறிஞ்சவும், உணவுகளில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் உதவும்.

First published:

Tags: Healthy Food, Oil food