முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஊறுகாய் இல்லைனா உங்களுக்கு உணவே இறங்காதா..? அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா..?

ஊறுகாய் இல்லைனா உங்களுக்கு உணவே இறங்காதா..? அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா..?

ஊறுகாய்

ஊறுகாய்

ஊறுகாய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதை குறிக்கிறது. ஏனெனில் அவை குடலுக்கு மிகச் சிறந்தவை.

  • 2-MIN READ
  • Last Updated :

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் உலகின் எந்தஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம், உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இருக்காது என்று சொல்வார்கள். உண்மையில், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான உணவு கலாச்சாரங்கள் உபரி பயிர்களை ஊறுகாய்களாக தயார் செய்து உற்பத்தி செய்கின்றன.

இதனால் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம்.

இந்தியாவில், ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும், வட மற்றும் மேற்கு இந்தியாவின் மா மற்றும் எலும்பிச்சை ஊறுகாய் முதல் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் இறைச்சி மற்றும் மீன் ஊறுகாய் வரை பல வகையான ஊறுகாய்கள் மிகவும் பிரபலமானவை. ஊறுகாய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதை குறிக்கிறது. ஏனெனில் அவை குடலுக்கு மிகச் சிறந்தவை. இருப்பினும், ஊறுகாய்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய நன்மைகள் உண்டா? இல்லையா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஊறுகாய் சாப்பிடுவதன் சுவையான நன்மைகள்:

2018ஆம் ஆண்டில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இயற்கையான மைக்ரோஃப்ளோராவால் உணவைக் கெடுப்பதையும் மாசுபடுத்துவதையும் தாமதப்படுத்துவதே ஊறுகாயின் கொள்கை நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் அதில் மசாலா, உப்பு, வினிகர், எண்ணெய் மற்றும் பிற வகையான அமிலங்கள் கூடுதலாக சேர்க்கப்படுவதால் ஊறுகாயின் சுவை மற்றும் சத்தான மதிப்பு இரண்டும் மேம்படுகின்றன.

மேலும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பழம், காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை நொதித்தல் முறையில் ஊறுகாய்களாக பயன்படுத்துவதன் மூலம் ஊறுகாயில் உள்ள லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமிலங்கள் உங்கள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் உதவுகின்றன. இதன் பொருள் பாரம்பரியமாக புளித்த ஊறுகாய்யை சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்கும், மேலும் மெட்டபாலிசத்திற்கு உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் என்னவென்றால், மசாலாப் பொருள்களைச் சேர்ப்பதால் ஊறுகாயில் நுண்ணூட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் மேம்படுகின்றன. மேலும் அவற்றை சிறிய அளவில் எடுத்துக்கொண்டால் கூட ஒருவருக்கு ஊட்டச்சத்து அடர்த்தியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஊறுகாய் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பது மட்டுமல்லாமல், ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்று எனக்கூறலாம்.

ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

அதிக அளவு உப்பு இருப்பதால் ஊறுகாய்களில் சோடியம் நிறைந்துள்ளது. மேலும், அவற்றில் ஏராளமான எண்ணெய் உள்ளது. உப்பு மற்றும் எண்ணெய் ஊறுகாயில் சேர்க்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும், பூஞ்சை தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் சேர்க்கப்படுகின்றன. ஆனால் உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் இதயத்திற்கு மோசமானவை, உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. மேலும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும். ஏனென்றால், எண்ணெயில் ஹைட்ரஜனேற்றப்பட்ட அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன.

அவை மிக மோசமான கொழுப்புகளாகும். டிரான்ஸ் கொழுப்பு உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது எல்.டி.எல் கொழுப்பின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. இது இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பு உடலுக்கு மோசமானது மற்றும் வீக்கம், நீர் தேக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான காரம் அல்சர் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே ஊறுகாய் பிரியர்களை அதனை அளவோடு எடுத்துக்கொண்டால் நல்லது.

கிச்சனில் உள்ள பழங்கள் , உணவுகளில் மொய்க்கும் சின்ன சின்ன ஈக்களால் பெரும் தொல்லையா..? இதோ சூப்பர் டிப்ஸ்

தினமும் ஊறுகாயை சாப்பிட வேண்டாம்:

கிளினிக்கல் நியூட்ரிஷன் ரிசர்ச் இதழில் 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பாரம்பரியமாக ஊறுகாய்களாக தயாரிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடும் என்று கூறுகிறது. ஒவ்வொரு நாளும் ஊறுகாய் சாப்பிடும் மக்கள் மிகவும் சுவையான உணவுகளுக்கு, குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு பசியை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது அவர்களின் ஒட்டுமொத்த உணவு நுகர்வு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த உணவுகள் சுவையான மற்றும் ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளால் செய்யப்பட்டவை என்பதையும் உறுதிப்படுத்தியது. மேலும் அதிகரித்த உணவு உட்கொள்ளலால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உயர் இரத்த அழுத்த அபாயங்களையும் அதிகரிக்கிறது.

ஏனெனில் அன்றாடம் ஊறுகாய்கள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மேலே குறிப்பிட்டுள்ளோம். எனவே ஊறுகாய் பிரியர்கள் அதன் சுவையை பெற வேண்டும் என்று விரும்பினால், வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையானவை மற்றும் சீரான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டுள்ள ஊறுகாயை குறிப்பிட்ட அளவு மட்டும் சாப்பிடுங்கள். தினமும் ஊறுகாய் நுகர்வை தவிர்த்துக் கொள்ளலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

First published:

Tags: Health tips, Pickle