இந்திய குடும்பங்களில் நீண்ட ஆண்டுகளாக முக்கிய பானமாக இருந்து வருகிறது டீ. குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து குடிப்பதை தவிர, நண்பர்களுடன் வெளியே சென்று பேசி மகிழும் போது அருந்தும் பானமாகவும் இருக்கிறது டீ.
இந்தியாவில் டீ அருந்தும் பலரை டீ பிரியர்கள் என்று சொல்வதை விட டீ வெறியர்கள் என்று சொல்லலாம். இந்தியர்களாகிய நமக்கு டீ முக்கியமானது மட்டுமல்ல அவசியமானதாகவும் இருக்கிறது. பொதுவாக டீ கடைகளிலும் தற்போது பிளாஸ்டிக் கிளாஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. குறிப்பாக நமது செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். இந்நிலையில் இந்தியாவின் சில இடங்களில் தற்போது குல்ஹாட்டில்(Kulhad) டீ வழங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
கைப்பிடிகள் இல்லாத பாரம்பரிய களிமண் கப் தான் குல்ஹாட் என்று குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் எளிமையான தோற்றத்தை கொண்டிருக்கிறது. இது வர்ணம் பூசப்படாத, அலங்காரமற்ற மற்றும் எளிய ஸ்டைலில் உள்ளது. குல்ஹாட் டீ மக்களிடையே பிரபலமாகி வருகிறது. பிளாஸ்டிக் கப் மற்றும் கிளாஸ்களில் வழங்கப்படும் டீ-யை விட இது சிறந்த தேர்வாக இருக்கிறது.
குல்ஹாட்டில் வழங்கப்படும் டீ ஆரோக்கியமானதா?
சுகாதாரம்:
குல்ஹாட்கள் எனப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட கப்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதில் டீ குடிப்பது கிளாஸ் மற்றும் கப்களில் மீண்டும் மீண்டும் குடிப்பதை விட சுகாதாரமானது. கிளாஸ்களில் டீ குடிக்கும் போது பாக்டீரியா பரவும் அச்சுறுத்தல் அதிகம். ஒருவர் டீ குடித்தவுடன் குல்ஹாட்கள் அகற்றப்பட்டு விடுவதால் பாக்டீரியா பரவல் அபாயம் இல்லை. எனவே குல்ஹாட்டில் டீ குடிப்பது பாக்டீரியா தொற்றை தடுக்க உதவும்.
கால்சியத்தின் ஆதாரம்:
மண்ணில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. குல்ஹாட்டில் கொடுக்கப்படும் டீ பருகுவது, களிமண்ணில் இருந்து குறைந்தப்பட்சம் சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது என்பதால், நமது எலும்புகள் வலுவடையும்.
மண் வாசனை:
மற்ற மண்பாண்டங்களைப் போலவே குல்ஹாட் சூளையில் சுடுவதன் மூலம் தயாராகிறது. களிமண் கோப்பை அதில் ஊற்றப்படும் சூடான திரவங்களை லேசாக உறிஞ்சுகிறது. தனித்துவமான மண் வாசனையை உருவாக்குகிறது. குல்ஹாட்டில் சூடான டீ ஊற்றி அதை பருகும் போது, குல்ஹாட் டீ-யின் சுவையானது களிமண்ணின் வாசனையால் அதிகரிக்கிறது. டீ-க்கு தனி நறுமணம் மற்றும்சுவையை சேர்க்கிறது.
கார்போஹைட்ரேட் உணவுகள் உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்
சுற்றுச்சூழலுக்கு கேடு தராது:
குல்ஹாட்கள் வெறும் களிமண்ணாலும் மண்ணாலும் ஆனவை. பயன்படுத்தி முடித்த பின் தூக்கி எறிந்தாலும் அவை பூமியில் மண்ணோடு கலக்கின்றன மற்றும் எந்த வகையான மாசுக்களையும் ஏற்படுத்தாது.
காரத்தன்மை கொண்டது..
பொதுவாக மண்ணில் அதிக காரத்தன்மை உள்ளது. இது மனித உடலில் இருக்கும் அமிலத்தை குளிர்விக்கும். இதன் விளைவாக அசிடிட்டி கட்டுப்படுத்தப்படுகிறது. குல்ஹாட் சாய் உடலில் உள்ள ஆசிட் கன்டென்ட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. களிமண் கப்பில் டீ குடிக்கும் பழக்கம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சூடான மற்றும் ஸ்ட்ராங்கான டீயுடன், குல்ஹாட்டின் நறுமணம் கலப்பது டீ அருந்தும் நேரத்தை அழகானதாகவும், ஆரோக்கியமானதாகவும் ஆக்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tea