Home /News /lifestyle /

வேகவைத்த முட்டையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

வேகவைத்த முட்டையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?


வேகவைத்த முட்டையை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடலாமா?

வேகவைத்த முட்டையை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடலாமா?

வேகவைத்த முட்டையை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்வது நல்லதா இல்லையா என்பது ஒரு முக்கியமான கேள்வியாக உள்ளது.

முட்டை என்பது வீட்டு சமையலறைகளில் காணப்படும் மிகவும் பொதுவான உணவுப் பொருள். ஏனெனில் அவை இனிப்பு மற்றும் சுவையான உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. கேக்குகள், கஸ்டர்டுகள், பேஸ்ட்ரி உணவுகள், பிரட், அசைவ உணவுகள் என பலவிதமான உணவுகளில் முட்டை முக்கிய அங்கம் வகிக்கிறது. மேலும், முட்டையில் புரதம், வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி 6, கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதேபோல முட்டைகள் பல்வேறு வழிகளில் சமைத்து சாப்பிடப்படுகின்றன.

அவற்றில் மிகவும் பிரபலமானவைகளில் சில வேகவைத்த முட்டை, ஆம்லெட், ஹாஃப்பாயில், பொடிமாஸ், முட்டை வறுவல், கலக்கி உள்ளிட்டவை. இவற்றில், மிகவும் விருப்பமான மற்றும் ஆரோக்கியமான வகை வேகவைத்த முட்டை தான் (Boiled Egg). இருப்பினும், வேகவைத்த முட்டையை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்வது நல்லதா இல்லையா என்பது ஒரு முக்கியமான கேள்வியாக உள்ளது. கர்ப்பக் காலம் என்பது மிக முக்கியமான காலகட்டம். பெண்களின் வாழ்க்கை பயணத்தில் ஒரு முக்கியமான அங்கம். இந்தக் காலத்தில் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டால் கர்ப்பக்காலத்தை ஆரோக்கியமான முறையில் வழிநடத்தி செல்லலாம்.

முட்டை


வேக வைத்த முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

ஒரு முட்டையில் சராசரியாக 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 75 கலோரிகள், 185 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 70 மில்லிகிராம் சோடியம், 67 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன. இவை தவிர, வைட்டமின் ஏ, டி, பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அடங்கியுள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடீன் (Lutein), சியாக்சன்தீன் (Zeaxanthin) ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கின்றன. எனவே இதனை உங்களின் விருப்பப்படி சமைத்து சாப்பிடலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி அனைவரிடமும் ஏற்படுகிறது.

வேக வைத்த முட்டையில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் அதனை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது நல்லது. கர்ப்பகாலத்தில் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் மேற்கண்ட முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாய்க்கும், குழந்தைக்கும் கிடைக்கும். மேலும் மருத்துவர் பரிந்துரைப்படி வேக வைத்த முட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்ணின் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து தினமும் 1 அல்லது 2 முட்டைகள் வரை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முட்டையிலும் சுமார் 185 மி.கி கொழுப்பு உள்ளது. பொதுவாக கர்ப்பிணி பெண்ணின் உடலுக்கு தினமும் 300 மி.கி தேவைப்படுகிறது.


வேகவைத்த முட்டையை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடலாமா?


வேகவைத்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

ஆரோக்கியமான வளர்ச்சியை அதிகரிக்க குழந்தைக்கு தேவையான அளவு புரதத்தை வேகவைத்த முட்டை வழங்குகின்றன. முட்டைகளில் கோலின் என்ற பொருள் உள்ளது. இது கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் மொத்த வளர்ச்சிக்கு இன்றியமையாததாக அமைகிறது. இது பல நோய் தாக்கத்தில் இருந்து குழந்தையை பாதுகாக்கிறது. ஒவ்வொரு முட்டையிலும் சுமார் 70கிராம் கலோரிகள் உள்ளன. மேலும் குழந்தைக்கும் தாய்க்கும் தேவையான தினசரி கலோரி தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்ய வேகவைத்த முட்டை உதவுகிறது. முட்டைகளில் நான்கு கரையக்கூடிய கொழுப்பு வைட்டமின்கள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் ஏ, இது கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் நுரையீரல், சிறுநீரகம், இதயம், கண்கள் மற்றும் கருவின் பிற உறுப்புகள் அடங்கும். முட்டைகளை உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை சமப்படுத்த உதவுகிறது. இருப்பினும், கர்ப்பிணி பெண்கள் வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. கர்ப்ப காலத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த உணவுகளை கர்ப்பக்காலத்தில் தவிர்க்கலாம்?

1. அதிக மெர்குரி நிறைந்த மீன்கள்

ஓமேகா 3 சத்துகள் கொண்ட மீன்களை சாப்பிடுவது நல்லது.


சுறா, ட்யூனா ஆகியவை அதிக மெர்குரி உள்ள மீன்கள். இவற்றை அதிக அளவில் உட்கொள்ள கூடாது. இந்த மீன்களை குறைந்த அளவில் எப்போதாவது சாப்பிடலாம். 2 மாதத்துக்கு ஒருமுறை சாப்பிடலாம். அதிக அளவில் உட்கொண்டால் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், வயிற்றில் உள்ள கரு, நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை பாதிக்கலாம். அரைவேக்காடு மீன்களை உண்ண கூடாது. சுஷி உணவுகளை சாப்பிட கூடாது. குறைந்த மெர்குரி அளவு கொண்ட மீன்களை வாரம் இருமுறை சாப்பிடலாம். மத்தி, நெத்திலி, சங்கரா , வஞ்சரம், வவ்வால் , கோலா , காரப்பொடி ஆகிய பல்வேறு மீன்கள் ஓமேகா 3 சத்துகள் கொண்டவை. இவற்றை சாப்பிடுவது நல்லது.

2. வேகவைக்காத முட்டை

சிலர் ஹாஃப் பாயில், பச்சை முட்டை சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். ஆனால் கர்ப்பக்காலத்தில் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சால்மெனெல்லா எனும் கிருமிகள் வேக வைக்காத முட்டைகளில் இருக்கும். எனவே, இதனால் குமட்டல், வாந்தி, வயிறு பிடிப்பு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவை கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
Published by:Arun
First published:

Tags: Egg, Lifestyle

அடுத்த செய்தி