Home /News /lifestyle /

வாழ்நாள் முழுவதும் பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்ன தெரியுமா?

வாழ்நாள் முழுவதும் பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்ன தெரியுமா?

Women

Women

Women Health | ஃபோலிக் ஆசிட் - டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஃபோலிக் ஆசிட். பருவமடையும் வயதில் உடல் வளர்ச்சிக்கு இது உறுதுணையாக அமையும். ரத்தத்தின் சிவப்பு அணுக்களின் வளர்ச்சிக்கு இது உதவும்.

நம் உடலுக்கு மிகவும் அடிப்படை தேவையாக உள்ள ஊட்டச்சத்துக்களை நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்றுக் கொள்கிறோம். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்ல சத்து மிகுந்த உணவுகள் அவசியமாகும். உடலுக்கான ஆரோக்கியம் என்பது ஒரே நாளில் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் மட்டும் கிடைத்து விடாது. ஒவ்வொரு நாளும் அதை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக, பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் அதிக சத்தான உணவு என்பது அவசியமாகிறது. குழந்தைப் பருவம் முதல் பருவம் அடைவது, தாய்மை அடைவது, மாதவிலக்கு நிற்பது போன்ற பல்வேறு சமயங்களில் அதற்கேற்ப உடலுக்கு சத்து அவசியமானது. அந்த வகையில், பெண்களின் வாழ்வில் இன்றியமையாத சில சத்துக்கள், அதன் தேவைகள் குறித்து இந்தச் செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளது.

கலோரிகள்

சம உயரம் கொண்ட ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கான கலோரி தேவைகள் என்பது மிகவும் குறைவு. ஏனென்றால், பெண்களின் உடலில் மிக அதிகமான கொழுப்பு சதவிகிதம் இருக்கும். ஆனால், ஆண்களுக்கு உடல் வலிமை அதிகம். இதனால், பெண்களுக்கு மெடபாலிக் ரேட் என்பது குறையும்.

ஆகவே தான் பெண்கள் பொதுவாக அதிக எடையுடன் காணப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் கர்ப்ப காலத்திலும் உடல் எடை அதிகரித்து விடுகிறது. அதே சமயம், தாய்ப்பால் ஊட்டும் காலத்தில் சற்று எடை குறைய வாய்ப்பிருக்கிறது. மாதவிலக்கு தடைபடும் சமயத்தில் உடலின் எடை மேலும் அதிகரித்து, பின்னாளில் நோய்கள் உண்டாகுவதற்கு காரணமாக அமையும்.



இரும்புச் சத்து

பெண்களின் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் சத்து இது. குழந்தைப் பருவத்தில் சீரான வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமாகும். ரத்தத்தின் அளவை அதிகரித்து, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி, ஆரோக்கியமான வளர்ச்சியை எட்ட இரும்புச் சத்து உதவிகரமாக இருக்கும். பருவ வயதில், மாதந்தோறும் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டுவதற்கு இரும்புச் சத்து கட்டாயத் தேவையாக இருக்கிறது. கர்ப்ப காலத்தின் குழந்தையின் வளர்ச்சிக்கும் ரத்தம் தேவைப்படுவதால், இரும்புச்சத்தின் தேவை இருமடங்காக அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, இரும்புச் சத்து குறைபாட்டால் பல்வேறு குறைபாடுகள் ஏற்படும்.

Also Read : ஃபிட்டான உடலை பெற கொரியன் டயட் சீக்ரெட்ஸ்.!

ஃபோலிக் ஆசிட்

டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஃபோலிக் ஆசிட். பருவமடையும் வயதில் உடல் வளர்ச்சிக்கு இது உறுதுணையாக அமையும். ரத்தத்தின் சிவப்பு அணுக்களின் வளர்ச்சிக்கு இது உதவும். ஃபோலிக் ஆசிட் குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படும். மகப்பேறு காலத்தில், குழந்தை குறைந்த எடையுடன் பிறக்காமல் தவிர்க்க ஃபோலிக் ஆசிட் மிக அவசியமானது.

Also Read : Fish Oil மாத்திரை விட்டமின் டி குறைபாட்டை போக்க உதவுமா..?

கால்சியம்

எலும்பு மற்றும் பற்களின் வலிமை தேவையானது ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது சுய உடல் பாதுகாப்புக்கும், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் எலும்புகள் வலுவிழக்கும் என்பதால், வாழ்நாள் முழுவதும் கால்சியம் சத்து அவசியமானது.
Published by:Selvi M
First published:

Tags: Health, International Women's Day, Women Health, Women's Day

அடுத்த செய்தி