ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் பெண்களின் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?

இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் பெண்களின் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?

இடைப்பட்ட உண்ணாவிரதம்

இடைப்பட்ட உண்ணாவிரதம்

இன்டர்மின்டென்ட் டயட் உடல் எடையைக் குறைக்க பயனுள்ளதாக இருந்தாலும், அது பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களை பாதிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிகாகோ ஆராய்ச்சியாளர்கள் மெனோபஸ் நிலையை அடைய உள்ள மற்றும் அடைந்த பெண்களில் சைவ உணவு உட்கொள்பவர்கள், சீரற்ற உணவுப்பழக்கம் கொண்டவர்கள் என பலதரப்பட்ட பெண்களை வைத்து 8 வாரத்திற்கு ஆராய்ச்சி செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் எடையை குறைப்பது என்பது சீரான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறை மூலமாக நடக்க வேண்டியது. உடல் எடையை குறைப்பதற்கான உணவு டயட்டைப் பொறுத்தவரை ஃபாஸ்டிங் எனப்படும் உண்ணாவிரத முறையை கடைபிடிப்பது பெண்களிடையே பிரபலமானதாக உள்ளது. அதில் இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent fasting) எனப்படும் இன்டர்மின்டென்ட் டயட் பிரபலமானது ஆகும். வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை முழுமையாக அல்லது பகுதியாக தவிர்ப்பது ஆகும்.

இதில் 16:8 முறை, 5:2 உணவு, போர் வீரர் உணவு, நாள் விட்டு நாள் உண்ணாவிரதம் என பல வகைகள் உள்ளன. ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்காக பெண்கள் மேற்கொள்ளும் உண்ணாவிரத முறைகள் எடை இழப்பிற்கு கைகொடுத்தாலும், அவர்களது கருவுறுதலை பாதிப்பதாக அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பெண்களின் உடல் பருமன் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், இடைப்பட்ட உண்ணாவிரதம் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இடைப்பட்ட உண்ணாவிரதம் ஹார்மோன்களை பாதிக்குமா?

யுனிவர்சிட்டி ஆப் இல்லினாய்ஸ் சிகாகோவின் ஊட்டச்சத்து பேராசிரியரான கிறிஸ்டா வரடி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு மெனோபஸ் காலக்கட்டத்திற்கு முன்பும், பின்பும் உள்ள உடல் பருமனான பெண்களை அவர்கள் இடைப்பட்ட உண்ணாவிரதம் இருக்க வைத்து 8 வாரங்கள் வரை கண்காணித்துள்ளனர். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் பிரபலமான “போர் வீரர் உணவு” அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் படி 4 மணி நேரத்திற்கு ஒருமுறை டயட் இருப்பவர்கள் கணக்கில்லாத கலோரிகளை உட்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் டயட் இருக்க வேண்டும். மற்றொரு குழு 6 மணி நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளும். இதில் உணவு கட்டுப்பாடு உள்ள மற்றும் உணவுக்கட்டுப்பாடு இல்லாத குழுக்களுக்கு இடையிலான ஹார்மோன் வேறுபாடுகள் ரத்த பரிசோதனைகள் மூலமாக குறித்து கொள்ளப்படுகிறது.

எட்டு வார உணவுக் கட்டுப்பாட்டிற்குப் பிறகு, உடல் முழுவதும் இனப்பெருக்க ஹார்மோன்களைக் கொண்டு செல்லும் புரதமான பாலின-பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய குளோபுலின் ஹார்மோனின் அளவுகள் மாறாமல் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேபோல் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் இரண்டையும் உருவாக்க உடல் பயன்படுத்தும் ஸ்டீராய்டு ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஆண்ட்ரோஸ்டெனியோன் ஆகியவற்றின் நடவடிக்கையிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. இப்படி ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாக நீடிப்பது, பெண்களின் கருவுறுதலை பாதிக்கக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : பெண்களுக்கு சிறந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறை என்ன? எப்போது தவிர்க்க வேண்டும்?

 ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன?

இன்டர்மின்டென்ட் டயட் உடல் எடையைக் குறைக்க பயனுள்ளதாக இருந்தாலும், அது பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களை பாதிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிகாகோ ஆராய்ச்சியாளர்கள் மெனோபஸ் நிலையை அடைய உள்ள மற்றும் அடைந்த பெண்களில் சைவ உணவு உட்கொள்பவர்கள், சீரற்ற உணவுப்பழக்கம் கொண்டவர்கள் என பலதரப்பட்ட பெண்களை வைத்து 8 வாரத்திற்கு ஆராய்ச்சி செய்துள்ளனர். இதன் மூலமாக தான் இன்டர்மின்டென்ட் ஃபாஸ்டிங் முறை பெண்களின் கருவுறுதலுக்கான ஹார்மோன்களை பாதிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Diet tips, Hormonal Imbalance, Intermittent Fasting