தோசை என்பது தென்னிந்திய உணவு வகைகளில் ஒரு தனிச்சிறப்பான உணவாகும். இந்த தோசைக்கு நாடு முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். தோசை பிரியர்களுக்கு ஒரு தட்டில் தோசை, சாம்பார், சட்னி வைத்து கொடுத்துவிட்டால் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். சுவையான மிருதுவான தோசைக்கு பெரும் ரசிககர்கள் உள்ளனர். தோசையில் பல வகைகள் உண்டு. செட் தோசை, ஸ்பாஞ்ச் தோசை, நெய் தோசை, ஆனியன் தோசை என பல்வேறு வகைகள் உள்ளன. இதில் செட் தோசை அதிக பேர் விரும்பி சாப்பிடும் ஒன்று.
இது ஒரு மென்மையான அப்பத்தை போன்ற மெல்லிய தோசையாகும், இது பஞ்சுபோன்ற, நுண்துளைகள் மற்றும் சாப்பிடுவதற்கு லேசானதாக இருக்கும். செட் தோசை பொதுவாக அளவில் சிறியது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தோசைகளின் எண்ணிக்கையில் பரிமாறப்படுகிறது. அதனால்தான் இதற்கு செட் தோசை என்று பெயர். இது ஒரு பிரபலமான காலை உணவாகும். மேலும் புளித்த மாவைக் கொண்டு விரைவாகச் செய்து விடலாம்.
ஆனால், புளித்த மாவு தயாராகும் வரை இனி இந்த செட் தோசைக்கு நீங்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. வழக்கமாக ஒரே இரவில் புளிக்கவைக்கப்பட்டு, மறுநாள் காலை உணவுக்காக இந்த மாவை பயன்படுத்தி கொள்வர். இனி நீங்கள் 1 இரவு கூட காத்திருக்க வேண்டியதில்லை. இன்ஸ்டன்ட் செட் தோசைக்கான செய்முறையை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். இதை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதற்கு முன் எதுவும் தயாரிப்பு தேவையில்லை.
இந்த உடனடி தோசை தயார் செய்ய பத்து நிமிடங்கள் மட்டுமே போதும். பெங்களூரு போன்ற இடங்களில், தேங்காய் சட்னி மற்றும் மசால் வைத்து செட் தோசை பரிமாறப்படுகிறது. ஆம், இது போன்ற உடனடி மாவை தயார் செய்ய உங்களுக்கு பழ உப்பு போதும். ருசியான ஆரோக்கியமான செட் தோசையை உடனடியாகச் செய்ய விரும்புபவர் என்றால், இந்த பதிவில் கூறும் செய்முறையை அப்படியே உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
இன்ஸ்டன்ட் செட் தோசை செய்முறை :
இன்ஸ்டன்ட் செட் தோசை செய்ய, முதலில் போஹாவை சில நிமிடங்கள் ஊறவைத்து கொண்டு அதில் ரவை, தயிர், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொண்டு கிரைண்டரில் அரைத்தெடுத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அடுத்து சிறிது பழ உப்பு (fruit salt) சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவு தான், அருமையான தோசை மாவு ரெடி.
Also Read : மாலை டீ டைமை ஹெல்த்தியாக மாற்றும் உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ்... ரெசிபி இதோ!
இந்த மாவை நெய் தடவிய தோசை கல்லில் பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நொடிகள் வேக விடவும். இது வெந்த பிறகு, தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதேனும் சட்னியுடன் வைத்து பரிமாறலாம். கூடுதல் சுவைக்காக நீங்கள் சிறிது பொடியையும் இதன் மீது தூவலாம். அவசரமான காலை நேரத்தில் ஒரு சுவையான தென்னிந்திய காலை உணவை வெறும் 10 நிமிடங்களில் நீங்கள் எளிதாக தயார் செய்ய இந்த இந்த செய்முறையை முயற்சித்து பாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breakfast, Dinner Recipes, Dosa, Idli dosa batter