ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வறுக்காமல்.. அரைக்காமல்.. நொடியில் இட்லி பொடி தயார் செய்ய டிப்ஸ்..!

வறுக்காமல்.. அரைக்காமல்.. நொடியில் இட்லி பொடி தயார் செய்ய டிப்ஸ்..!

இட்லி பொடி

இட்லி பொடி

டிஃபன் பாக்ஸின் இட்லியை போட்டு இந்த பொடியை மிக்ஸ் செய்து நன்கு ஊற வைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவை நா-மொட்டுகளுக்கு விருந்தாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இட்லிக்கு மிளகாய் பொடியை விட சிறந்த காம்பினேஷன் எதுவும் இருக்க முடியாது. சில நேரங்களில் வீட்டில் இட்லி பொடி இல்லாமல் போகும்போது இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம். பேச்சுலர்ஸுகளுக்கும் இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும். டிஃபன் பாக்ஸின் இட்லியை போட்டு இந்த பொடியை மிக்ஸ் செய்து நன்கு ஊற வைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவை நா-மொட்டுகளுக்கு விருந்தாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மிளகாய் தூள் - 2 tsp

உப்பு - 1 tsp

பெருங்காயத்தூள் - 1/2 tsp

நல்லெண்ணெய் - 3 tsp

தயிர் - 2 tsp

பூண்டு - 3

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

நல்லெண்ணெய்யை நன்கு காய்ச்சி சூடாக்கி மிளகாய்த்தூளில் ஊற்றுங்கள்.

பின் பூண்டையும் இடித்து போடுங்கள்.

இப்போது நன்கு கலந்துகொள்ளுங்கள்.

கடைசியாக தயிர் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள்.

அவ்வளவுதான் இட்லி பொடி தயார். சுட சுட இட்லி , தோசைக்கு தொட்டு சாப்பிட்டுப் பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

First published:

Tags: Food recipes