முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க உதவும் மூலிகை டீ தயாரிப்பது எப்படி..?

அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க உதவும் மூலிகை டீ தயாரிப்பது எப்படி..?

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ

ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப்படி அதிக காரமான உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனைக்கு காரணமாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாட மக்கள் முழு உற்சாகத்துடன் தயாராகி வருகிறார். பண்டிகை காலங்களில் போது அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடுவதும், நமக்கு பிடித்த உணவு பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதும் இயல்பான ஒன்றுதான். அதிக அளவு இனிப்பு வகைகளும் நொறுக்குத் தீனி வகைகளும் இந்த நேரத்தில்அனைவரும் விரும்பி உட்கொள்வார்கள்.

ஆனால் இதன் மூலம் நமக்கு செரிமான கோளாறுகள் அல்லது வாயு தொல்லை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள் உட்கொள்ளும் போது அசிடிட்டி உண்டாகும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதனை தடுக்க நாம் செரிமானத்தை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான மூலிகை பானங்களை பருகலாம். இந்த மூலிகை பானத்தை வீட்டிலேயே மிகவும் எளிதான முறையில் நம்மால் தயார் செய்ய முடியும். எவ்வாறு வீட்டிலேயே ஆரோக்கியம் மிகுந்த மூலிகை பானத்தை தயார் செய்வது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • தண்ணீர் – 2 கப்
  • கருவேப்பிலை இலைகள் - 10
  • கற்பூரவள்ளி இலைகள் - 3
  • காய்ந்த கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் - 1
  • நறுக்கிய இஞ்சி – 1 இன்ச்

மூலிகை பானம் தயாரிக்கும் செய்முறை:

  • ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அடுப்பின் தீயை மிதமான அளவில் வைக்க வேண்டும்.
  • இப்போது கருவேப்பிலை, கற்பூரவள்ளி இலைகள், காய்ந்த கொத்தமல்லி, சீரகம், ஏலக்காய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை நீரில் போட வேண்டும்.
  • நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பின் தீயை முழுவதுமாக குறைத்து பாத்திரத்தை மூடி விடவும்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, மேலும் ஐந்து நிமிடங்களுக்கு பாத்திரத்தை திறக்காமல் அப்படியே வைக்க வேண்டும்.
  • பிறகு பாத்திரத்தில் உள்ள நீரை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து மூலிகை பானத்தின் சுவையை அதிகரித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் ஆரோக்கியமான சுவையான மூலிகை பானம் தயார்.

Also Read : ஒற்றை தலைவலி முதல் எடை குறைப்பு வரை... தினமும் காலை இந்த டீ குடியுங்கள்..!

ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப்படி அதிக காரமான உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனைக்கு காரணமாகும். இதன் காரணமாக உண்டாகும் செரிமான கோளாறுகளை ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளித்து சரி செய்யவில்லை எனில் நாளடைவில் அவை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே மேலே கூறியுள்ள இந்த ஆயுர்வேத மூலிகை பானத்தை பயன்படுத்தி செரிமானம் மற்றும் வாயு தொல்லைகளை நம்மால் எளிதாக சரி செய்து கொள்ள முடியும்.

First published:

Tags: Acidity, Herbal Tea, Holi Celebration