ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சட்னி அரைக்க டைம் இல்லையா..? இன்ஸ்டன்ட் சட்னி பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.. உடனடி சட்னி தயார்.!

சட்னி அரைக்க டைம் இல்லையா..? இன்ஸ்டன்ட் சட்னி பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.. உடனடி சட்னி தயார்.!

சட்னி பொடி

சட்னி பொடி

இந்த சட்னி பொடியை அரைத்து காற்று புகாத சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து அதிகபட்சமாக ஐந்து நாட்கள் முதல் ஒரு வாரம் வரை உபயோகப் படுத்தலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தினமும் காலையிலும் இரவிலும் இட்லி அல்லது தோசையை மாறி மாறி சாப்பிடுபவர்களுக்கு தினமும் அவற்றிற்கு என்ன சட்னி அரைப்பது என்பதே பெரிய குழப்பமாக இருக்கும். மேலும் அவசர அவசரமாக மதிய உணவு காலை உணவென இரண்டையும் சேர்த்து செய்துவிட்டு வேலைக்கு கிளம்புவதே ஒரு சவாலாக இருக்கும். அப்படி சிரமப் படுவோர்க்கு இந்த சட்னி பொடி பெரிய உறுதுணையாக இருக்கும். இந்த சட்னிப் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் அவசரத்தில் தேவைப்படும்போது 1 நிமிடத்திற்குள் சட்னி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

கொப்பரைத் தேங்காய் துருவல் - 2 கப்

காய்ந்த மிளகாய் - 4

பொட்டுக்கடலை - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வெறும் வாணலியில் தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, காய்ந்த மிளகாயை மிதமான தீயில் வறுக்கவும். போந்நிறமானதும் ஆரிய பின்னர் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்காமல் கரகரவென இருக்குமாறு பொடித்து எடுத்தால் சட்னி பொடி தயார்.

சட்னி தேவைப்படும்போது இந்த பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு கொண்டு தாளித்துக் கொட்டினால் உடனடி சட்னி தயார். புளிப்பு சுவையை விரும்புவோர் தேவைப்பட்டால் சிறிது  தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

இந்த சட்னி பொடியை அரைத்து காற்று புகாத சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து அதிகபட்சமாக ஐந்து நாட்கள் முதல் ஒரு வாரம் வரை உபயோகப் படுத்தலாம்.

First published:

Tags: Breakfast, Chutney, Food recipes