• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இன்னைக்கு என்ன சமையல் சுனிதாவின் மட்டன் கெபாப் ரெசிபி...டிரை பண்ணி பாருங்க

இன்னைக்கு என்ன சமையல் சுனிதாவின் மட்டன் கெபாப் ரெசிபி...டிரை பண்ணி பாருங்க

சுனிதாவின் மட்டன் கெபாப்

சுனிதாவின் மட்டன் கெபாப்

அவர் மாஸ்டர் செஃபில் செய்து அசத்திய மட்டன் கெபாப் ரெசிபியை பார்வையாளர்களுக்காக சேனனில் செய்து காட்டிய ரெசிபி உங்களுக்காக...

  • Share this:
இன்னைக்கு என்ன சமயல் யூடியூப் என மிக எளிமையான முறையில்  ஆரம்பித்து இன்று மாஸ்டர் செஃப் புகழ் சுனிதா என்னும் பெருமையை அடைந்திருக்கிறார் எனில் அது அத்தனை சாதாரணமான விஷயம் அல்ல. இவரின் ஒவ்வொரு வீடியோவும் பார்வையாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருப்பதே அவருடைய இன்னைக்கு என்ன சமையல் சேனலின் ஸ்பெஷல். அப்படி சமீபத்தில் அவர் மாஸ்டர் செஃபில் செய்து அசத்திய மட்டன் கெபாப் ரெசிபியை பார்வையாளர்களுக்காக சேனனில் செய்து காட்டிய ரெசிபி உங்களுக்காக...

தேவையான பொருட்கள் :

மட்டன் - 400 கிராம்
கொழுப்பு - 100 கிராம்
மஞ்சள் -
வெங்காயம் - 1
குடை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - கையளவு
மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை - 1
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தே.அ
ஸ்கீவர் ஸ்டிக்ஸ் - 3



செய்முறை :

முதலில் மட்டனை மஞ்சள் போட்டு தடவி வைத்துக்கொள்ளுங்கள். பின் அதை தண்ணீரில் கழுவி விடுங்கள். கழுவியதும் அதை கத்தியை கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். முடிந்த அளவு சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள்.

அடுத்ததாக நறுக்கிய மட்டனை சாப்பிங் ஜாரில் போட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். ஒன்றும் பாதியுமாக அரைத்ததும் அதை கிண்ணத்தில் போட்டு பிசைந்துகொள்ளுங்கள்.

பின் அதை 15 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் ஊற வையுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து ஸ்கீவர் கம்பிகள் இருந்தால் அதில் ஒரு பெரிய உருண்டை அளவுக்கு கீமை எடுத்து அதில் பிடித்து ஒட்ட வையுங்கள். அதை அப்படியே மேலே தொடங்கி அடிப்பகுதி வரை கொஞ்சம் கொஞ்சமாக உருட்டு உருட்டி பிடியுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் கையில் தொட்டு தொட்டு பிடிக்கலாம்.

அரிசிக்கு மாற்றாக்க தினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்..அதன் வகைகளும்...

இப்படி அனைத்து மசாலா கீமாவையும் பிடித்த பின் தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒன்று ஒன்றாகாக வரிசையாக அடுக்குங்கள்.

அடுப்பை மிதமான பதத்தில் வைக்கவும். மெதுவாக நன்கு சிவக்க வேக வேண்டும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடுங்கள். அப்படி ஒவ்வொன்றாக சுட்டு எடுத்ததும் தட்டில் அப்படியே வைத்து பரிமாறுங்கள்

அவ்வளவுதான் சுனிதாவின் மட்டன் கபாப் ரெடி.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: