இந்தியர்கள் பயன்படுத்தும் உப்பில் சையனைடு கலப்படமா...? நிறுவனங்கள் விளக்கம்

டாடா உப்பு ஒரு கிலோ உப்புவில் 1.85 mg அளவுக்கு ஃபெர்ரோ சையனைடை கலப்பதாகவும், அதே டாடா சால்ட் லைட்டில் ஒரு கிலோவிற்கு 1.90 mg கலப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

news18
Updated: August 31, 2019, 9:38 PM IST
இந்தியர்கள் பயன்படுத்தும் உப்பில் சையனைடு கலப்படமா...? நிறுவனங்கள் விளக்கம்
உப்பு
news18
Updated: August 31, 2019, 9:38 PM IST
சமீபத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஆய்வுக்குக் கீழ் டேபிள் உப்பு கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் தானியங்கள் மற்றும் பண்ணை தயாரிப்புகளின் தலைவர் ஷங்கர் குப்தா ஆய்வு நடத்தியபோது உப்பில் ஃபெர்ரோசையனைடு அளவு எச்சரிக்கும் விதத்தில் அளவு அதிகமாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதை உடனே உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொட்டாசியம் ஃபெர்ரோசையனைடு அளவை இந்திய உப்பு நிறுவனங்கள் அதிகமாகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பின் அந்த நிறுவனங்களின் உப்புகளை அமெரிக்காவின் மேற்கு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போது அது உறுதி செய்யப்பட்டு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதில் டாடா உப்பு ஒரு கிலோ உப்புவில் 1.85 mg அளவுக்கு ஃபெர்ரோ சையனைடை கலப்பதாகவும், அதே டாடா சால்ட் லைட்டில் ஒரு கிலோவிற்கு 1.90 mg கலப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைச்சகம் ட்விட்டரில் “ ஃபெர்ரோசையனைட் உப்பு பதப்படுத்தப்படுவதற்கு பெரும் பங்காற்றுகிறது. அதை நுகர்வதால் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதுமட்டுமன்றி உலக உணவு தர நிலை நிர்ணயித்திருக்கும் 14 மில்லி கிரமிற்கும் குறைவாக 10 மில்லி கிராம் தான் இந்தியாவில் அனுமதிக்கப்படுகிறது என்று விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து டாடா நிறூவனத்திடம் கேள்வி எழுப்பியபோது ’இது எங்கள் மீதான தவறான குற்றச்சாட்டு. நாங்கள் உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் தரநிலை படியே தயாரிக்கிறோம். இந்த ஃபெர்ரோ சையனைடு அனுமதி இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, யூரோப், ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் போன்ற நாடுகளும் அனுமதிக்கின்றன” என்று கூறியுள்ளனர்.

Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...