தினமும் காபி குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்.. காபி பிரியர்களே உஷார்.. இதெல்லாம் தெரிஞ்சுகோங்க..

காஃபி

காஃபி என்றால் யாருக்கு தான் பிடிக்காது .ஆனால் அளவுக்கு அதிகமாக காஃபி எடுத்துக்கொள்வதனால் உடலுக்கு சில தீமைகள் ஏற்படும்.

  • Share this:
தினமும் காலை எழுந்ததும் பலர் கட்டாயம் காபி குடிப்பதை விரும்புவார்கள். காபி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது என்று சொல்லுவார்கள். அந்த வகையில் காபி குடிக்க பிடிக்காதவர்கள் மிகக் குறைவு. உண்மையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இத்தாலிய பிராண்டான லாவாஸா இந்திய மில்லினியல்களிடம் (80's and 90's) "ப்ரூயிங் உரையாடல்கள்" என்ற கணக்கெடுப்பை நடத்தியது. அதில் பதிலளித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர், தங்களின் நாளை ஒரு கப் காபியைத் அருந்துவதில் இருந்து தொடங்குவார்கள் என கண்டறிந்தது. 

மேலும் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில் எடுக்கப்பட்ட நேர்காணலில் 94% பேர் காபியை விரும்புவது தெரியவந்துள்ளது. மேலும் பதிலளித்தவர்களில் 50 சதவீதம் பேர் வேலைக்குப் பிறகு நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது ஒரு கப் காபி குடிக்க விரும்புகிறார்கள் என்பதால் காபி பிணைப்புக்கான பானமாகவும் பார்க்கப்படுகிறது. காபியை குடித்தால் சிலர் புத்துணர்ச்சி பெறுவர். ஏனெனில் காபியில் ஆற்றலைக் கொடுக்கும் கலவையான காஃபின் உள்ளது. 

இது நம்மை நன்கு தூண்டக்கூடியதாகவும், பயணத்தின் போது ஆற்றல் மிக்கதாக வைத்திருக்கிறது. காபி மட்டுமல்ல, தேநீர், சாக்லேட், கோலா சார்ந்த குளிர்பானம், எனர்ஜி பானங்கள் மற்றும் சில மருந்துகளில் காஃபின் உள்ளது. இதனால் காபியை ஒருவர் எடுத்துக்கொள்ளும் அளவை பொறுத்து சில நன்மைகள் மற்றும் தீமைகளை கொடுக்கிறது. காபி சிலருக்கு ஒரு சூடான உணர்வைத் தூண்டும், கவனம் மற்றும் விழிப்புணர்வோடு இருக்க உதவும். அதுவே காபியை அதிகம் உட்கொண்டால், அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும், இதய துடிப்பை துரிதப்படுத்துவதையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் மாலை நேரங்களில் அதிகம் உட்கொண்டால் அது தூங்கும் திறனையும் தடுக்கிறது.

அதிக காபி குடிப்பதால் உடலில் ஏற்படும் தீங்குகள் :

காபியில் உள்ள காஃபின் முதன்மையாக நம் உடலில் உள்ள மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இது மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளை நேரடியாக பாதிக்கிறது. அதிக காபி குடிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். குறிப்பாக ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  மற்றும் பொதுவாக காபி  உட்கொள்ளாதவர்கள் குடித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உறங்கும் நேரத்தில் காபி குடித்தால்  தூக்கமின்மையை உண்டாக்கும். ஒரு நாளைக்கு  4 கப் காபிக்கு மேல் குடிப்பது ஆயுள் காலத்தை குறைக்கும். 

இளைஞர்களிடையே காபி நுகர்வு மாரடைப்பை அதிகரிக்கும். காபியில் காஃபின்  அதிகம் இருப்பதால் இதனை உட்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதாக தெரிகிறது.

வெறும் வயிற்றில் காபி உட்கொள்ளும் போது முக்கியமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. காபியை அளவாக குடிக்கும் போது தலைவலி அறிகுறிகளைப் போக்கும். அதுவே, காபி  அதிகமாக குடிப்பது ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். 

காபி குடிப்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு பங்களிக்கிறது. மேலும், காஃபின் தூக்க சுழற்சியை மட்டுமல்ல, நம் உடலில் உள்ள நாளமில்லா அமைப்பையும் பெரிதும் பாதிக்கிறது. குளுக்கோஸ் நீர்த்தேக்கங்களை வெளியிடுவதன் மூலமும், இதயத் துடிப்பை வேகப்படுத்துவதன் மூலமும், கார்டிசோலின் அளவைச் சுடுவதன் மூலமும் இரத்தத்தில் அட்ரினலின் உற்பத்தி செய்யும் அட்ரீனல் சுரப்பியைத் தூண்டுவதற்கு இது காரணமாக உள்ளது.

காபி குடிப்பதால் நன்மைகள் அதிகம் ஏற்படுகிறதா அல்லது குறைபாடுகள் அதிகம் ஏற்படுகிறதா?

காஃபின் வழக்கமான நுகர்வு நன்மைகளை விட குறைவான குறைபாடுகளை ஏற்படுத்துகிறது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். காஃபின் மன அழுத்தத்தின் காரணமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் ஏற்படும் இடையூறுகள், எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு, பொருள் சார்பு மற்றும் பிற வாழ்க்கை முறை கோளாறுகளுக்கும் வழிவகுக்கிறது. 

இருப்பினும், காஃபின் லேசான மருந்துகள் வகையைச் சேர்ந்தது என்பதையும், பெரிய சார்புநிலையை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அறிந்து கொள்வது முக்கியம். தலைவலி, குறைந்த ஆற்றல் நிலை, செயலற்ற தன்மை, தசை வலி மற்றும் எரிச்சல் போன்ற கோளாறுகளை காபி குடிப்பதன் மூலம் குறைக்கலாம். இருப்பினும் காபி நுகர்வு அதிகம் இருந்தால் உடல் கோளாறுகளும் அதிகம் இருக்கும் மறக்காதீர்கள். எனவே, ஒருநாளைக்கு 2 முறைக்கு மேல் காபி குடிப்பது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும்.
Published by:Tamilmalar Natarajan
First published: