ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இரவு தூங்கச்செல்வதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

இரவு தூங்கச்செல்வதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

தண்ணீர்

தண்ணீர்

Health Tips | சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்று 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தண்ணீர் என்பது மனிதரின் வாழ்வில் அத்தியாவசிய பயன்பாட்டுகளில் ஒன்றாக உள்ளது. நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு சரியான விகிதத்தில் தண்ணீர் அருந்த வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே தான் சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்று 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருந்தால் தான் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும். ஆனால் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக தண்ணீர் குடிக்க வேண்டுமா? இல்லை தவிர்க்கலாமா? என்ற சந்தேகம் அதிகளவில் நம்மில் பலருக்கு எழக்கூடும். இதோ இதற்கான பதில்கள் இங்கே…

தூங்க செல்வதற்கு முன்னர் தண்ணீர் அருந்த வேண்டுமா?

இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக தண்ணீர் குடித்தால் நடுஇரவில் கழிப்பறைக்குச்செல்ல நேரிடும் என்பதால் பலர் இதனைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிப்பதால் நீர் அழுத்தம் மற்றும் தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகள் மட்டும் தான் ஏற்படுமே தவிர வேறு எந்தவிதமான உடல் நல பிரச்சனைகளும் ஏற்படாது. எனவே நாம் எவ்வித அச்சமும் இன்றி தூங்க செல்வதற்கு முன்னதாக தண்ணீர் தாராளமாக அருந்தலாம்.

Read More : வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா..? உஷார்..!

அதிலும் வெதுவெதுப்பாக நீரை இரவு குடித்துவிட்டு தூங்கும் போது, இரவு முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இதோடு வயிற்று வலி அல்லது உடல் பிடிப்புகளை எளிதாக்குவதற்கும் உதவுகிறது. மேலும் வெதுவெதுப்பான நீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலில் கழிவுகளை அகற்றுவதை எளிதாக்குகிறது. வியர்வையும் அதிகளவில் வெளியேற்றுகிறது.

இரவில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

இரவு தண்ணீர் குடிக்கும் போது நாள் முழுவதும் இருந்த உடல் அலுப்பு மற்றும் மன அழுத்தம் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தூங்கச்செல்வதற்கு முன்னதாக தண்ணீர் அருந்தும் போது உடலில் புதிய தசைகளை உருவாக்குவதோடு, தசைகளை வலுவாக்கும்.
உடலை வெப்பநிலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இதய அழுத்தத்தைக் குறைக்கிறது.
இரவு தூங்கும் போது அதிகளவு வெதுவெதுப்பான தண்ணீர் அருந்தும் போது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு உடல் எடையை குறைக்கவும் உதவியாக உள்ளது.
எனவே இனிமேலாவது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இரவு தூங்குவதற்கு முன்னதாக தண்ணீர் குடிப்பதை மறந்துவிடாதீர்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Health, Water