முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Immunity | Health | மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெல்த்தி லட்டுகள் - வீட்டிலேயே செய்யலாம்..

Immunity | Health | மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெல்த்தி லட்டுகள் - வீட்டிலேயே செய்யலாம்..

லட்டு

லட்டு

இந்த காலத்தில் நம் உணவில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

தற்போது குளிர்கால சீசன் தொடங்கியுள்ளதால், கூடவே பல்வேறு தொற்றுநோய்களும், வைரஸ் பாதிப்புகளும் வரும். ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் இருக்கும் போது இது போன்ற மூடுபனி காலத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும் இந்த காலத்தில் நம் உணவில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், குளிர்ந்த மில்க் ஷேக்குகள் அல்லது கோல்டு காஃபிகள் ஆகியவற்றை ஒதுக்கி வைப்பது நல்லது. குறிப்பாக சளி, இருமல் ஆகியவை எளிதில் தொற்றும் என்பதால் சத்தான குளிர்கால உணவுகளை சாப்பிட வேண்டும்.

இருப்பினும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சில சமயங்களில் சுவையான இனிப்புகள் தின்பண்டங்களை சாப்பிட வேண்டும் என்று தோன்றலாம். அப்படியானால் வீட்டிலேயே லட்டு வகைகளை தயாரித்து குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் வழங்கலாம். பொதுவாக செய்யும் லட்டு போல் அல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமான நாம் மறந்த பாரம்பரிய தானிய வகைகளை வைத்து சுவையான லட்டுகளை செய்யலாம். இதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லப்பாகு, கருப்பட்டி போன்றவற்றை சேர்த்து ஆரோக்கியமான லட்டை செய்து சாப்பிடலாம். சளி மற்றும் காய்ச்சல் அபாயத்தைத் தடுக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லட்டுகளை எப்படி செய்வது என்பதை காணலாம்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் C உணவுகள்

1. தினை லட்டு:

தேவையான பொருட்கள்:

திணை - 200 கிராம்

பருப்பு - 75 கிராம்

பனை வெல்லம் - 200 கிராம்

முந்திரி மற்றும் பாதாம் - தேவையான அளவு

நெய் - 6 ஸ்பூன்

ஏலக்காய் - 2

செய்முறை :

நன்றாக சுத்தம் செய்த திணையை ஒரு வாணலியில் மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். இப்போது பாசிப்பருப்பையும் சற்று நிறம் மாறும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளலாம். பாசிப்பருப்பு மற்றும் தினை வறுத்த சூடு லேசாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் பாசிப்பருப்பை சேர்த்து ஓரளவு பொடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தினை மற்றும் வெல்லம் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக நைசாக பொடித்துக் கொள்ள வேண்டும். நன்றாகப் பொடித்த திணை மாவை ஒரு தட்டில் கொட்டி வறுத்த முந்திரி மற்றும் பாதாம் இவற்றுடன் சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சூடு பண்ணி இதன் மேல் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும். தினை மாவு மற்றும் பாசிப்பருப்பு நெய் ஏலக்காய் இவற்றுடன் இந்த லட்டு மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

2. ராகி லட்டு

தேவையான பொருட்கள்:

ராகி மாவு -2 கப்

வெல்லம் பொடித்தது - 2கப்

பாதாம் பருப்பு - 20கிராம்

முந்திரி பருப்பு -25 கிராம்

நில கடலை வறுத்தது - 100கிராம்

நெய் - 1 கப்

செய்முறை :

ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி பாதாம், முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். பின் வறுத்த நில கடலையை தோல் நீக்கி நெய்யில் வறுத்து கொள்ளவும். பின் 3 ஸ்பூன் நெய் ஊற்றி ராகி மாவை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். வறுத்து வைத்துள்ள பாதாம் முந்திரி கடலை 3/4 பங்கு எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.பின்னர் இதனுடன் வறுத்து ராகி மாவு வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். பின்னர் இதை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி கால்பங்கு எடுத்து வைத்த பாதாம் முந்திரி நில கடலை லேசா உடைத்து போடவும். பின் இதனுடன் மீதி நெய்யை சூடு செய்து ஊற்றி பிசைந்து உருண்டை பிடிக்கவும். ஒரு வாரம் வரை கெடாமல் வைத்து கொள்ளலாம். மிகவும் சத்தான உருண்டை குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்.

3. டிரை ஃப்ரூட்ஸ் லட்டு

தேவையான பொருட்கள் :

முந்திரி - 20

உலர் திராட்சை -25

பாதாம் பருப்பு - 15

பிஸ்தா பருப்பு - 15

அத்தி பழம் - 4

பேரீச்சம்பழம் - 20

நெய் - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். டிரை ப்ரூட்ஸ் களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளை ரோஸ்ட் செய்யும்படி வறுத்து விடவும். பின்னர் உலர் திராட்சை பேரிச்சம் பழங்களை சேர்த்து நன்றாக கலந்து விடவும். நன்றாக கலந்து விட்டவுடன் ஒரு டீ ஸ்பூன் கசகசாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.கசகசாவும் நன்றாக நெய்யில் பொரிய வந்தவுடன் அடுப்பை அணைத்து கை பொறுக்கும் சூடு வரும்வரை ஆறவிடவும். கை பொறுக்கும் சூடு வந்தவுடன் தேவையான அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும் இப்போது சுவையான மிகவும் ஆரோக்கியமான டிரை ப்ரூட்ஸ் லட்டு சுலபமாக தயாராக உள்ளது.

4. பாசிப்பருப்பு லட்டு

பாசிப்பருப்பு - 1 கப்

சர்க்கரை தூள் - 1 கப்

ஏலக்காய் - 3

நெய் - 3 குழிக்கரண்டி

செய்முறை:

பாசிப்பருப்பு பொன் நிறமாக மாறி, வாசம் வரும் குறைந்த தீயில் வறுக்கவும். அது சூடு குறைந்ததும் பொடி செய்யவும். தூள் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்கவும். உருகிய நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். சுடு இருக்கும் போதே மாவினை உருண்டைகளாக பிடிக்கவும்.

5. சுக்கு மற்றும் வெந்தய லட்டு:

சுக்கு மற்றும் வெந்திய விதைகளின் சிறப்பால் செறிவூட்டப்பட்ட இந்த லட்டு வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும். மேலும் குளிர்ச்சியுடன் வரும் அசௌகரியத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.

தேவையான பொருட்கள்:

நெய் - 60 கிராம்

கோதுமை மாவு - 1 கப்

வெந்தய விதைகள் - 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி

சுக்கு - 1 தேக்கரண்டி

நாட்டு சர்க்கரை - 3/4 கப்

செய்முறை :

ஒரு கனமான கடாயில் நெய்யை உருக்கி, மைதாவை சேர்க்கவும். குறைந்த தீயில் சுமார் 30 நிமிடங்கள் வறுக்கவும். தீயை அனைத்து விட்டு கலவையை முழுமையாக குளிர்விக்க விடவும். மற்றொரு கடாயில், சுக்கு, வெந்தயம், பெருஞ்சீரகம் வறுத்து அதனை அரைக்கவும். மைதா குளிர்ந்ததும் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்த கலவையை கலந்து, பிறகு நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

6. எள்ளு லட்டு

தேவையான பொருட்கள்:

எள்ளு - 1 கப்

வெள்ளம் - தேவையான அளவு

செய்முறை :

எள்ளை ஒரு வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து சிறிது நேரம் ஆற விடவும். பின்பு ஒரு மிக்சியில் போட்டு நன்றாக அரைத்தவுடன் கரும்பு சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைக்கவும். பின் தேவையான வடிவில் உருட்டிக் கொள்ளவும். சாப்பிட சுவையான ஆரோக்கியமான எள்ளு உருண்டை தயார்.

First published:

Tags: Immunity boost, Immunity Diet, Laddu, Monsoon