ரசித்து ருசித்து சாப்பிட... 5 வகை ரசம்‌! இதோ ரெசிபி!

மிளகு ரசம்

சுவையன ரசம் வைக்க சில ரகசியம்‌ இருக்கு. மணக்க மணக்க ரசம்‌ வைக்கும்‌ சூட்சுமமே அதற்குப்‌ போடும்‌ ரசப்பொடியில்தான்‌ இருக்கிறது. ஒவ்வொரு ரசத்துக்கும்‌ ஒவ்வொரு விதமாக ரசப்பொடி தயாரிக்க வேண்டும்‌. அவ்வளவுதான்!

  • Share this:
ரசம்‌ என்னும்போதே வாசம்‌ மூக்கைத்‌ துளைக்க வேண்டும்‌... சுவை, இன்னும்‌ ஒரு கவளம்‌ சாதத்தை உள்ளே அனுப்ப வேண்டும்‌. ஆனால்‌, நம்மில் பலருக்கு அந்த அளவுக்கு சுவையான ரசம் வைக்க தெரிவதில்லை. சுவையன ரசம் வைக்க சில ரகசியம்‌ இருக்கு. மணக்க மணக்க ரசம்‌ வைக்கும்‌ சூட்சுமமே அதற்குப்‌ போடும்‌ ரசப்பொடியில்தான்‌ இருக்கிறது. ஒவ்வொரு ரசத்துக்கும்‌ ஒவ்வொரு விதமாக ரசப்பொடி தயாரிக்க வேண்டும்‌. அவ்வளவுதான்!

1.பூண்டு ரசம்

தேவையானவை:

புளி - எலுமிச்சம்பழ அளவு,

உப்பு - ஒரு டீஸ்பூன்‌,

பூண்டு -   4 பல்‌,

பெருங்காயத்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

மிளகு - அரை டீஸ்பூன்‌,

காய்ந்த மிளகாய்‌ - 4. தாளிக்க:

எண்ணெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

கறிவேப்பிலை - சிறிது.

பூண்டு ரசம்


செய்முறை: புளியை 2 கப்‌ நீரில்‌ கரைத்து வடிகட்டி உப்பு போட்டு கொதிக்கவிடவும்‌. பின்னர் அத்துடன் பெருங்காயத்தூளையும்‌ சேர்க்கவும்‌. பிறகு காய்ந்த மிளகாய்‌, மிளகு, பூண்டு இவற்றை கரகரப்பாக அரைத்து அந்த புலி தண்ணீரில் சேர்க்கவும்‌. கடைசியாக எண்‌ ணெயில்‌ கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்‌. பூண்டு ரசம் தயார்.

2. பொரித்த ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு - கால்‌ கப்‌,

மஞ்சள்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

உப்பு - ஒரு டீஸ்பூன்‌,

எலுமிச்சம்பழம்‌ - 1,

பெருங்காயத்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌.

வறுத்தரைக்க: உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌,

மிளகு - அரை டீஸ்பூன்‌,

காய்ந்த மிளகாய்‌ - 3,

எண்ணெய்‌ - அரை டீஸ்பூன்‌,

தேங்காய்‌ துருவல்‌ - ஒரு டீஸ்பூன்‌.

தாளிக்க: எண்ணெய்‌ - அரை டீஸ்பூன்‌,

கடுகு - கால்‌ டீஸ்பூன்‌,

கறிவேப்பிலை - சிறிது. 

செய்முறை: முதலில்‌ துவரம்பருப்பை மஞ்சள்தூள்‌ சேர்த்து நன்றாக வேகவைக்கவும்‌. அதோடு ஒன்றரை கப்‌ தண்ணீர்‌ சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள்‌ சேர்த்து கொதிக்க வைக்கவும்‌. பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து இறக்கவும்‌. எண்ணெயில்‌ கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்‌. சிறிது ஆறியதும்‌ எலுமிச்சம்பழத்தை பிழிந்து கலக்கி விடவும்‌. சூப்பரான பொரித்த ரசம் ரெடி.

3. பருப்பு ரசம்‌

தேவையானவை:

துவரம்பருப்பு - கால்‌ கப்‌,

தக்காளி - 1,

உப்பு - ஒரு டீஸ்பூன்‌,

புளி -நெல்லிக்காய்‌ அளவு,

மஞ்சள்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

பூண்டு - 3 பல்‌.

ரசப்பொடிக்கு:

துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌,

தனியா - 3 டீஸ்பூன்‌,

மிளகு - ஒரு டீஸ்பூன்‌,

சீரகம்‌ - அரை டீஸ்பூன்‌,

காய்ந்த மிளகாய்‌ - 3.

தாளிக்க: நெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

கடுகு - கால்‌ டீஸ்பூன்‌, கறிவேப்பிலை,

கொத்துமல்லி - சிறிது.

செய்முறை:

ரசப்பொடிக்கான பொருட்களை பச்சையாக, சற்று கரகரப்பாக பொடித்துக்‌ கொள்ளவும்‌. பருப்பை மஞ்சள்தூள்‌ சேர்த்து வேகவைத்து எடுத்துக்‌ கொள்ளவும்‌. பின்னர்‌ புளியை ஒன்றரை கப்‌ தண்ணீரில்‌ நன்றாக கரைத்து வடிகட்டிக்‌ கொள்ளவும்‌. தக்காளியை நன்றாகக்‌ கரைத்துவிட்டு, புளித்தண்ணீரையும்‌ உப்பையும்‌ சேர்த்து கொதிக்க வைக்கவும்‌. பிறகு பூண்டை எண்ணெயில்‌ லேசாக வதக்கி அதையும்‌ தட்டிப்‌ போடவும்‌. சிறிது கொதித்ததும்‌ ரசப்பொடி போட்டு, ஒரு கொதி வந்ததும்‌ பருப்புடன்‌ தேவையான தண்ணீரையும்‌ சேர்க்கவும்‌. நுரையுடன்‌ பொங்கி வரும்போது இறக்கி நெய்யில்‌ கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும்‌.

4. தக்காளி ரசம்‌

தேவையானவை:

தக்காளி - 3,

புளி - சிறிதளாவு அளவு,

உப்பு - ஒரு டீஸ்பூன்‌,

பெருங்காயத்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

மஞ்சள்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌.

ரசப்பொடிக்கு: து

வரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌,

மிளகு - ஒரு டீஸ்பூன்‌,

சீரகம்‌ - அரை டீஸ்பூன்‌,

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌,
கறிவேப்பிலை - சிறிது,

காய்ந்த மிளகாய்‌ - 4,

தனியா - 3 டீஸ்பூன்‌.

தாளிக்க: நெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

கடுகு - கால்‌ டீஸ்பூன்‌,

கொத்துமல்லி - சிறிதளவு.

செய்முறை:

ரசப்பொடிக்கு மேலே கூறியவற்றை மிக்ஸியில்‌ நைஸாக பொடித்துக்‌ கொள்ளவும்‌. தக்காளியை கொதித்த நீரில்‌ போட்டு 5 நிமிடம்‌ மூடிவைக்கவும்‌. பிறகு தோலை நீக்கிவிட்டு
மிக்ஸியில்‌ போட்டு அரைக்கவும்‌. புளியை ஒரு கப்‌ நீரில்‌ நன்றாகக்‌ கரைத்து வடிகட்டி, அதில்‌ உப்பையும்‌ அரைத்த தக்காளியையும்‌ சேர்த்து நன்றாகக்‌ கொதிக்கவிடவும்‌. மஞ்சள்தூள்‌,
பெருங்காயத்தூள்‌, பொடித்த ரசப்பொடி எல்லாவற்றையும்‌ சேர்த்து நன்றாகக்‌ கொதித்ததும்‌ பின்னர்‌ இறக்கி நெய்யில்‌ கடுகு, கொத்துமல்லி சேர்த்து தாளிக்கவும்‌

5. மிளகு ரசம்

தேவையானவை:

புளி - எலுமிச்சம்பழ அளவு,

உப்பு - ஒரு டீஸ்பூன்‌,

பெருங்காயத்தூள்‌ - கால்‌டீஸ்பூன்‌.

ரசப்பொடிக்கு:

துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்‌,

மிளகு - ஒரு டீஸ்பூன்‌,

சீரகம்‌ - அரை டீஸ்பூன்‌,

காய்ந்த மிளகாய்‌ - 4,

கறிவேப்பிலை - சிறிது.

தாளிக்க: நெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌,

கடுகு - கால்‌ டீஸ்பூன்‌,

கறிவேப்பிலை - சிறிது.செய்முறை: ரசப்பொடிக்கென கொடுத்துள்ளவற்றைப்‌ பொடிக்கவும்‌. ஒரு பாத்திரத்தில்‌ 2 கப்‌ நீர்விட்டு அதில்‌ உப்பு, புளி இரண்டையும்‌ போடவும்‌. பிறகு பெருங்காயத்தூளை சேர்க்கவும்‌. கொதிக்க ஆரம்பித்த உடன்‌ அதில்‌ பொடித்து வைத்துள்ள ரசப்பொடியை போட்டு கொதித்து மேலே வந்ததும்‌ இறக்கி, நெய்யில்‌ கடுகு, கறிவேப்பிலையை தாளித்து கொட்டவும்‌. உடம்பு வலிக்கு, சளி தொல்லைக்கு மிகவும்‌ ஏற்ற ரசம்‌ இந்த மிளகு ரசம்.
Published by:Vaijayanthi S
First published: