நம் வீடுகளில் இட்லி மீந்து போனால் உடனே இட்லி உப்புமா தான். சூர்யவம்சம் படத்திற்கு பிறகு இதே கதை தான் வீட்டில். இரவில் செய்யும் டிபன் ரெசிப்பிகளில் மீந்து போக அதிக வாய்ப்பு கொண்ட டிஷ் இட்லி தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் தோசயை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இட்லி என்ரால் 3 க்கு மேல் இறங்காது. இதே அசைவ பிரியங்கர்கள் என்றால் சிக்கன், மட்டன் கிரேவியுடன் இட்லியை சாப்பிட்டு விடுவார்கள். ஒருவேளை அப்படியே மீந்து போனாலும் பெண்கள் கவலை கொள்ள மாட்டார்கள். அதை அப்படியே எடுத்து வைத்து காலையில் பிரேக் ஃபாஸ்ட்டாக இட்லி உப்புமாவை தலையில் கட்டி விடுவார்கள்.
இட்லியில் உப்புமாவை தவிர வேற எந்த
ரெசிபியும் செய்ய முடியாதா?என்ற சந்தேகம் பெண்கள் தொடங்கி அனைவருக்கும் இருக்கும். அதற்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இட்லி மீந்து போனால் அதில் சில்லி இட்லி, ஃபைரைடு இட்லி என சில வித்யாசமான ரெசிபிக்களை செய்ய முடியும். அந்த வகையில் இன்று பார்க்க போவது மசாலா இட்லி. யூடியூப்பில் தனது சமையல் வீடியோக்களால் கலக்கி கொண்டிருக்கும் ஸ்டெஃபி இந்த மசாலா இட்லி ரெசிபியை செய்து காட்டியுள்ளார். வாங்க பார்க்கலாம்.
இதையும் படிங்க.. ஒருமுறை இந்த மாதிரி மீன் குழம்பு வச்சி பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க!
தேவையான பொருட்கள்:
இட்லி, வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை,கொத்தமல்லி, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு
செய்முறை:
1. முதலில் மீந்து போன இட்லியை விரும்பிய வடிவத்தில் கட் செய்து கொள்ள வேண்டும்.
2. பின்பு அந்த இட்லியை எண்ணெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. இப்போது கடாயில்
எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
4. பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
5. இப்போது உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி அதில் வெட்டி வைத்துள்ள இட்லியை சேர்த்து ஒன்றாக வதக்க வேண்டும். இதில் கொத்தமல்லியை தூவ வேண்டும்.
இதையும் படிங்க.. வெறும் 5 நிமிடத்தில் சூப்பரான டிபன் ரெடி பண்ணலாம்.. முட்டை, உருளைக்கிழங்கு மட்டும் போதும்!
6. கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கினால் சூப்பரான மசாலா இட்லி தயார்.
இனிமேல் இரவில் இட்லி மீந்து போனால் கவலை வேண்டாம், அந்த இட்லியை இப்படி டேஸ்டியான மசாலா இட்லியாக மாற்றி விடுங்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.