முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இட்லி மாவில் ரிப்பன் பகோடா செய்யலாமா..? உடனே செய்யும் 5 நிமிட ரெசிபி...

இட்லி மாவில் ரிப்பன் பகோடா செய்யலாமா..? உடனே செய்யும் 5 நிமிட ரெசிபி...

ரிப்பன் பகோடா

ரிப்பன் பகோடா

பேக்கரியின் ஸ்பெஷல் கார வகை நாக்ஸுகளில் ரிப்பன் பகோடாவுக்கு மாற்று எதுவும் இருக்க முடியாது. அதற்கு நீங்கள் தீவிர ஃபேன் எனில் அதை இனி நினைத்த போதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிடலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :

என்னதான் வகை வகையான உணவுகள் வந்தாலும் ஸ்னாக்ஸுகள், சாட் உணவுகள் என வந்தாலும் பேக்கரி உணவுக்கு எப்போதுமே தனிச்சிறப்புதான். அந்த வகையில் பேக்கரியின் ஸ்பெஷல் கார வகை நாக்ஸுகளில் ரிப்பன் பகோடாவுக்கு மாற்று எதுவும் இருக்க முடியாது. அதற்கு நீங்கள் தீவிர ஃபேன் எனில் அதை இனி நினைத்த போதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். எப்படி என ரெசிபியை கவனியுங்கள்.

தேவையான பொருட்கள் :

கெட்டியான இட்லி மாவு - 1 கிளாஸ்

பொட்டுக்கடலை - 1 கப்

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தே.அ

எண்ணெய் - வறுக்க தேவையான அளவு

செய்முறை :

தண்ணீர் ஊற்றாத கெட்டி மாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பொட்டுக்கடலையை மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்த பொட்டுக்கடலை மாவை இட்லி மாவில் சேர்த்து நன்கு பிசைய கெட்டிப்பதம் வரும். உப்பு சேர்க்க மறக்காதீர்கள். தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இப்போது அதில் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் மாவு ரெடி.

தக்காளியே இல்லாமல் குழம்பு வைக்க யோசிக்கிறீங்களா..? உங்களுக்காக 7 நாட்களுக்கான ரெசிபி..!

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.

முறுக்கு அச்சு எடுத்து அதில் ரிப்பன் பக்கோடா அச்சு வைத்து ஒரு உருண்டை மாவை அதில் வைத்து காய்ந்த எண்ணெயில் பிழிந்துவிடுங்கள்.

அவை பொன்னிறமாக வெந்து வந்ததும் லாவகமாக எடுத்து கிண்ணத்தில் போடுங்கள்.

அவ்வளவுதான் ரிப்பன் பக்கோடா தயார்.

First published:

Tags: Food recipes, Snacks