இரவு அல்லது காலை உணவுக்கு இட்லி , தோசை என்பது ஒரே உணவாக இருந்தாலும் அதை ஸ்பெஷலாக்குவது அதன் சைட்டிஷுகள்தான். ஆனால் அதையும் ஒரே மாதிரி தினமும் சமைத்துக்கொடுத்தால் சாப்பிடுவோருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் செய்து செய்து அலுத்துப்போய்விடும். எனவே இன்று பிரண்டையில் சட்னி செய்து அசத்துங்கள். இது ஆரோக்கியமானதும்கூட...
தேவையான பொருட்கள் :
பிரண்டை - 200 கிராம்
வெங்காயம் - 2
தனியா - 1 tsp
சீரகம் - 1 tsp
காயந்த மிளகாய் - 6
புளி - சிறிதளவு
தேங்காய் - 2 துண்டு
எண்ணெய் - 3 tsp
உப்பு - 1 tsp
கடுகு - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
கடலைப்பருப்பு - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
முதலில் பிரண்டையின் தோலை சீவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், தனியா, சீரகம் , காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இறக்குவதற்கு முன் புளியையும் சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் பிரண்டையை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். கொஞ்சம் சுருங்குவது போல் ஆனதும் அடுப்பை அணைத்து அதையும் ஆற வையுங்கள்.
அவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவேண்டும். அரைக்கும்போது உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அரைத்ததும் ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு தாளித்துக்கொட்டினால் சட்னி தயார்.
அவ்வளவுதான் பிரண்டை சட்னி தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.