ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எப்போதும் போல் இல்லாமல் இன்று வித்தியாசமாக பிரண்டை சட்னி செய்து அசத்துங்கள்...ரெசிபி இதோ...

எப்போதும் போல் இல்லாமல் இன்று வித்தியாசமாக பிரண்டை சட்னி செய்து அசத்துங்கள்...ரெசிபி இதோ...

பிரண்டை சட்னி

பிரண்டை சட்னி

என்னதான் இட்லி , தோசையாக இருந்தாலும் அதை ஸ்பெஷலாக்க இந்த பிரண்டை சட்னியை செய்து கொடுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இரவு அல்லது காலை உணவுக்கு இட்லி , தோசை என்பது ஒரே உணவாக இருந்தாலும் அதை ஸ்பெஷலாக்குவது அதன் சைட்டிஷுகள்தான். ஆனால் அதையும் ஒரே மாதிரி தினமும் சமைத்துக்கொடுத்தால் சாப்பிடுவோருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் செய்து செய்து அலுத்துப்போய்விடும். எனவே இன்று பிரண்டையில் சட்னி செய்து அசத்துங்கள். இது ஆரோக்கியமானதும்கூட...

தேவையான பொருட்கள் :

பிரண்டை - 200 கிராம்

வெங்காயம் - 2

தனியா - 1 tsp

சீரகம் - 1 tsp

காயந்த மிளகாய் - 6

புளி - சிறிதளவு

தேங்காய் - 2 துண்டு

எண்ணெய் - 3 tsp

உப்பு - 1 tsp

கடுகு - 1/2 tsp

உளுத்தம் பருப்பு - 1/2 tsp

கடலைப்பருப்பு - 1/2 tsp

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

முதலில் பிரண்டையின் தோலை சீவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், தனியா, சீரகம் , காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இறக்குவதற்கு முன் புளியையும் சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

அவற்றை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளுங்கள்.

காலை உணவை எளிதாக்கும் ராகி சேமியா... 10 நிமிடத்தில் அசத்தலான டிஃபன் தயாராகிடும்...

பின் பிரண்டையை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். கொஞ்சம் சுருங்குவது போல் ஆனதும் அடுப்பை அணைத்து அதையும் ஆற வையுங்கள்.

அவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவேண்டும். அரைக்கும்போது உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அரைத்ததும் ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு தாளித்துக்கொட்டினால் சட்னி தயார்.

அவ்வளவுதான் பிரண்டை சட்னி தயார்.

First published:

Tags: Food recipes