முகப்பு /செய்தி /lifestyle / மீந்த இட்லி மாவை வைத்து முறுக்கு சுடுவது எப்படி?

மீந்த இட்லி மாவை வைத்து முறுக்கு சுடுவது எப்படி?

arisi murukku

arisi murukku

மீந்து போன இட்லி மாவை வைத்து மொறு மொறுன்னு முறுக்கு சுட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயல்பாக நமது வீடுகளில் பண்டிகை காலங்களில் முறுக்கு சுடுவது இயல்பு. ஆனால், வீட்டில் மீதம் இருக்கும் இட்லி மாவை வைத்து மொறு மொறுன்னு முறுக்கு சுடலாம் தெரியுமா?. மீந்த இட்லி மாவுடன் அரிசி மாவு, பொட்டு கடலை மாவு மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து சுவையான முறுக்கு செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு - 1 கப்.

பொட்டு கடலை - 1 கப்.

அரிசி - 2 ஸ்பூன்.

எள்ளு - 1/2 ஸ்பூன்.

சீரகம் - 1/4 ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

சமையல் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

>முறுக்கு சுடுவதற்கு முன்னதாக ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டு கடலை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். அதேப்போன்று, இரண்டு ஸ்பூன் அரிசியையும் அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

> முறுக்கு மாவினை தயார் செய்ய, ஒரு பெரிய பாத்திரத்தில் மீந்து போன இட்லி மாவு சேர்த்து, அதனுடன் பொட்டு கடலை மாவு, அரிசி மாவு, எள்ளு, சீரகம், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.

> பெரும்பாலும் இட்லி மாவில் இருக்கும் ஈரப்பதம், முறுக்கு மாவிற்கு தேவையான பதத்தினை அளிக்கும். தேவைப்பட்டால் தண்ணீர் மற்றும் எண்ணெய் சிறிதளவு சேர்த்து பிசைத்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

> இப்போது, முறுக்கு சுட்டு எடுக்க, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். இதனிடையே முறுக்கு அச்சு அல்லது குழாயினை எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

> எண்ணெய் நன்றாக காய்ந்ததும், முறுக்கு அச்சில் (அ) குழாயில் எண்ணெய் தடவிய பின் முறுக்கு மாவினை நிறப்புங்கள். பின்னர், இல்லை அல்லது ஜல்லி கரண்டி மேல் முறுக்கு மாவை புழிந்து, எண்ணெயில் போடவும்.

> எண்ணெயில் போட்ட முறுக்கு பொன்னிறமாக மாறியவுடன், அதை ஒரு எண்ணெய் வடிக்கட்டி பாத்திரத்திற்கு மாற்றவும். இதோ, உங்கள் இட்லி மாவு மொறு மொறுப்பான முறுக்கு தயார்.

தமிழர்களின் பிரபலமான நொறுக்கு தீணிகளில் ஒன்றான முறுக்கினை அப்படியே ஒரு தட்டில் வைத்து பரிமாறலாம். அருகில் ஒரு கோப்பை வரக்காப்பி அல்லது டீ இருந்தால் கூடுதல் சிறப்பு.

First published:

Tags: Food recipes, Idli dosa batter