• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இடியாப்ப பிரியாணி செய்ய ரெசிபி!

இடியாப்ப பிரியாணி செய்ய ரெசிபி!

இடியாப்ப பிரியாணி

இடியாப்ப பிரியாணி

வீட்டில் காலையில் செய்த இடியாப்பம் மீந்து விட்டதா? கவலைய விடுங்க... அந்த இடியாப்பத்தை ஒரு நொடியில் காலிபண்னிடலாம். எப்படி தெரியுமா? அந்த மீந்துபோன இடியாப்பத்தில் பிரியாணி செய்தால் உடனே நீ நான் என்று போட்டிப்போட்டுக் கொண்டு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள்... வாங்க அந்த ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்...

  • Share this:
பிரியாணி என்றாலே நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அத்தகைய பிரியாணியை இடியாப்பத்தில் செய்தால் எப்படி இருக்கும். வாங்க இடியாப்ப பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருள்கள்

உதிர்த்த இடியாப்பம் - 2 கப் ( 400 கிராம் )

தக்காளி - 1

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

பட்டை - 1 இன்ச் அளவு

கிராம்பு - 2

பெரிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை - சிறிது



செய்முறை 

வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
தாளித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும். தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் பச்சை வாசனை போனதும் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்துடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இப்போது சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி.

மேலும் படிக்க... பர்ஃபெக்டான இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்ய டிப்ஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: