சிக்கன் பக்கோடா போட்ட மணிமேகலை கணவர் ஹுசைன்!

சிக்கன் பக்கோடா

பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணத்திற்கு பிறகு மணிமேகலை கணவருடன் வசித்து வருகிறார்.

 • Share this:
  விஜே மணிமேகலை கணவர் ஹுசைன் செய்த ஸ்பெஷல் பேச்சலர் சிக்கன் பக்கோடா தான் இன்றைய ரெசியி டைமில் நாம் பார்க்க போவது.

  மணிமேகலை - ஹுசைன் ஜோடிக்கு சமூகவலைத்தளத்தில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். இவர்களின் யூடியூப் வீடியோக்கள் அசால்ட்டாக மில்லியன் பார்வையாளர்களை எட்டிவிடுகிறது. கொரோனா லாக்டவுனில் இவர்கள் தொடங்கி யூடியூப் சேனல் இன்று 1 மில்லியனை தாண்டி சப்ஸ்கிரைபர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். சன் மியூசிக்கில் விஜேவாக தனது பயணத்தை தொடங்கி மணிமேகலை, ஹுசைனை காதல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடந்த இந்த திருமணத்திற்கு பிறகு மணிமேகலை கணவருடன் வசித்து வருகிறார். விஜய் டிவியில் இருவரும் சேர்ந்து மிஸ்டர் & மிர்ஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தனர். அதிலும் அதற்கு அடுத்து ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கிக்கு பிறகு மணிமேகலை தான் பலரின் ஃபேவரெட்.

  மணிமேகலைக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக இருக்கும் கணவர் ஹுசைன் பயங்கர ஜாலியான கேரக்டர்.பெரும்பாலும் வீட்டில் சமைப்பதும் இவர் தான். மணிமேகலையின் சமையல் திறமை பற்றி ஊருக்கே தெரியும். ஹுசைன் செய்த வித்யாசமான பேச்சிலர் சிக்கன் பக்கோடாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

  முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்த்துக் கொள்வோம். சிக்கன், சோளமாவு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாரு, தயிர், உப்பு. தேவைப்பட்டால் கரம் மசாலா தூள் உடன் சிறிதளவு தனியா தூளையும் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முதலில் ஒரு பாத்திரத்தில் ஃப்ரஷ் சிக்கன் துண்டுகளுடன் சோளமாவு, மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து பின்பு அதில் எலுமிச்சை சாறு தயிர் சேர்த்து கலவையாக தயார் செய்து கொள்ள வேண்டும். அதை சரியாக 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.  பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் ஊற வைத்து சிக்கன் கலவையில் இருந்து வெறும் சிக்கன் துண்டுகளை மட்டும் ஒவ்வொன்றாக எடுத்து காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ஹுசைன் ஸ்டைல் பேச்சிலர் சிக்கன் பக்கோடா தயார். நீங்களும் இதை வீட்டில் செய்து பாருங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: