விலங்குகளை அடிப்படையாக கொண்ட இறைச்சியை ஒப்பிடுகையில், தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட இறைச்சியில் இருந்து குறைவான புரதத்தை தான் மனித உடல் உறிஞ்சிக் கொள்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “ஜர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் அண்ட் ஃபுட் கெமிஸ்ட்ரி’’ என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது சிக்கனுக்கு மாற்றாக உலகில் முன்வைக்கப்படும் தாவர மாடல் இறைச்சியில் இருந்து மனித உடல் குறைவான சத்துக்களை தான் உறிஞ்சிக் கொள்கிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடல் இறைச்சி அறிமுகம்
தற்போதைய உலகில் உயிர்களை கொல்லாமலேயே இறைச்சி உண்ணும் அனுபவத்தை மக்களுக்கு வழங்குவதற்கான ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. விலங்குகளை கொன்று உண்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு அளிப்பதாக இது அமையும் என்றும் கருதப்படுகிறது. அதன்படி சோயா மற்றும் கோதுமை க்ளூடென் ஆகியவற்றைக் கொண்ட சிக்கன் இறைச்சி போன்ற மாடல் இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சமைத்து சாப்பிடும்போது அதில் இருந்து வெளியேறும் என்ஜைம் நம் உடலில் உணவு செரிமானம் ஆக உதவுகிறது.
ஆய்வு முடிவு
தாவாரங்களை அடிப்படையாகக் கொண்ட சிக்கன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் உண்மையான சிக்கன் இறைச்சியைக் காட்டிலும் செயற்கை சிக்கனில் உள்ள பெப்டைட்ஸ் என்பது தண்ணீரில் கரையும் தன்மை குறைவாக உடையது என்று தெரிய வந்துள்ளது. இதனால், மனித உடலில் உள்ள செல் சுவர்கள் இதை அவ்வளவாக உறிஞ்சிக் கொள்வது இல்லை.
இந்நிலையில், சத்துக்களை மனித உடல் உறிஞ்சுக் கொள்ளும் வகையில் பெப்டைடுகளை மேம்படுத்துவது குறித்து தான் அடுத்தகட்ட ஆராய்ச்சி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதியம் 2 மணிக்கு மேல் பழங்கள் சாப்பிடக்கூடாதா.? ஊட்டச்சத்து நிபுணரின் பதில்
தாவர சிக்கனில் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட இறைச்சிகள் அல்லது கோழி இறைச்சிகள் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதும், நாளடவைவில் இதய நோய் பாதிப்புகளை இது உண்டாக்கும் என்றும் நாம் படித்திருக்கிறோம். ஆனால், இதற்கு நேர் மாறான பலன்களை தருவதாக தாவர சிக்கன் அமைந்துள்ளது.
அதாவது, தாவர சிக்கன் என்பது குறைவான கொலஸ்ட்ரால் அளவுகளைக் கொண்டது. இதய நோய் பாதிப்புகளுக்கான வாய்ப்பு என்பது குறைவு.
வெஜிடேரியன் பிரியர்களுக்கான மாற்று
இயல்பாகவே வெஜிடேரியன் உணவு பழக்க, வழக்கத்தை கொண்ட சிலருக்கு எப்போதாவது இறைச்சியை ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால், அசைவத்தை தொடக் கூடாது என்ற மனக் கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கை சார்ந்த கொள்கை காரணமாக அவர்கள் அதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதுபோன்ற நபர்களுக்கு ஒரு மாற்று இறைச்சியை வழங்கிடும் வகையில் தாவரம் அடிப்படையிலான சிக்கன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Protein Diet, Protein Rich Food