Home /News /lifestyle /

முறுக்கு ரெசிபி... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... இதைவிட சிறந்த ஸ்னாக்ஸ் இருக்க முடியாது..!

முறுக்கு ரெசிபி... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க... இதைவிட சிறந்த ஸ்னாக்ஸ் இருக்க முடியாது..!

முறுக்கு

முறுக்கு

முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

தென்னிந்திய ஸ்நாக்ஸ் வகைகள் உலகம் முழுவதும் பிரபலம். குறிப்பாக பசி நேரத்தில் நமக்கு மிக பெரிய வரப் பிரசாதமாக அவை கொஐ கொடுக்கும். ஆப்பம், வடை, பஜ்ஜி போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை ஒரு நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் சாப்பிடலாம். அதுபோல நாவை சுண்டி இழுக்கக் கூடிய, சுவை மிகுந்த ஸ்நாக்ஸ்களில் ஒன்று முறுக்கு ஆகும்.

முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மாலை வேளையில் டீ அல்லது காஃபி உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிக பொருத்தமான ஸ்நாக்ஸ் முறுக்கு ஆகும்.

எல்லோருக்கும் பிடித்தமானது

முறுக்கு என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் ஆகும். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் முறுக்கு பிடிக்காத எவரும் கிடையாது. பல் இல்லை என்றாலும் கூட, முறுக்கு சாப்பிடும் எத்தனையோ மக்களையோ நாம் நம் அனுபவத்தில் பார்த்திருப்போம்.

முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

முறுக்கு அரிசி மாவு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 டீ ஸ்பூன் அளவு
வெள்ளை எள் - 1 டீ ஸ்பூன் அளவு
நெய் - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - ¼ டீ ஸ்பூன்
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ½ லிட்டர்
உப்பு - தேவையன அளவு



செய்முறை

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, இளம் சூட்டில் சூடேற்றவும். இதில் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். இதை ஆறிய பின்னர் அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது உளுந்து மாவு, மிளகாய் பொடி, பெருங்காயம், சீரகம், அரிசி மாவு, நெய் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

இப்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு பிசுபிசுப்பாக இருக்க வேண்டும். பிசைந்த மாவை அப்படியே உருண்டை பிடித்து எடுக்கவும். அந்த உருண்டைகளை முறுக்கு அச்சு உள்ளே வைத்து, பிழிவதன் மூலமாக பச்சை மாவு அச்சுகளை பெறவும்.

இந்த மேட்டர் தெரிஞ்சா பாதாம் தோலை இனிமேல் தூக்கி போடவே மாட்டீங்க..!

பிறகு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்றாக சூடேறியதும் அதில், இந்த முறுக்கு அச்சுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். முறுக்கு நல்ல பொன்னிறமாக மாறும் வரை வேக விடவும். அவ்வப்போது திருப்பி விட்டு, நன்றாக வேக வைக்கவும்.

இறுதியாக முறுக்கை எடுத்து ஆற வைத்து, காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளவும். மாலை நேரங்களில் உங்களுக்கு ஸ்நாக்ஸ் ரெடி.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Snacks

அடுத்த செய்தி