• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆப்பிள் தோலை தூக்கி போடாமல் இப்படி பயன்படுத்துங்க..

ஆப்பிள் தோலை தூக்கி போடாமல் இப்படி பயன்படுத்துங்க..

காட்சி படம்

காட்சி படம்

ஆப்பிள் தோலிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

  • Share this:
    ஆப்பிளின் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. தற்போது அப்பிளின் பளபளப்பை அதிகரிக்க அதன் மேல் பகுதியில் மெழுகு தடவப்படுவதால், தோலை சீவி குப்பையில் போட்டுவிடுகிறீர்கள்.

    ஆனால் ஆப்பிள் தோலிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் சமையலறையில் மீதமுள்ள ஆப்பிள் தோல்கள் இருந்தால் அவற்றை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,



    ஆப்பிள் தோல் தேநீர்

    தினமும் ஒரு கப் சூடான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தேநீர் சாப்பிடுவதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? உங்கள் ஆப்பிள் தோல்களை ஒரு சுவையான தேநீராக மாற்றலாம். இதற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி , ஒரு சிறிய இலவங்கப்பட்டை குச்சியை போடவும். இதனுடன் ஆப்பிள் தோல்களை சேர்த்து சில நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் சுவைக்கு ஏற்ப தேநீரில் தேன் சேர்க்கவும். இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள் இரண்டுமே அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன, எனவே நீங்கள் ஒரு அழகான இளஞ்சிவப்பு நிற தேநீரை அருந்தாலும்.

    also read : தொப்பையை குறைக்க உதவும் சுரைக்காய் ஜூஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..



    ஆப்பிள் சீடர் வினிகர்: 

    ஆப்பிள் சீடர் வினிகரை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். ஒரு பாட்டிலில் சில ஆப்பிள் தோல்கள், சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்கவும். அதில் சர்க்கரை கரைக்கும் வரை குலுக்கவும். பாட்டிலை ஒரு மூடி அல்லது துணியால் மூடி விட்டு சுமார் 3-4 வாரங்கள் வைத்திருக்கவும். பின்னர் எடுத்து பார்த்தால் ஆப்பிள் சீடர் வினிகர் தயார்.

    ஆப்பிள் சிப்ஸ்

    நாம் அனைவரும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகளை விரும்புகிறோம். அதற்கு ஆப்பிள் சிப்ஸ் நல்ல தேர்வாக இருக்கும். ஒரு கடாயில், சிறிது வெண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை சர்க்கரை சேர்க்கவும். நன்றாகக் கிளறி, பின்னர் இதனுடன் ஆப்பிள் தோல்களில் சேர்க்கவும். இதனை ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு எடுக்கவும். ஆப்பிள் தோல்களை வேகும் வரை வறுக்கவும். இந்த ஆரோக்கியமான சிற்றுண்டியை நீங்கள் தினமும் சாப்பிடலாம்.

    ஆப்பிள் ஜாம்

    நீங்கள் வீட்டிலேயே ஆப்பிள் ஜாம் தயார் செய்யலாம், இது மிகவும் எளிதானது. இதற்கு ஒரு கடாயில், ஆப்பிள் தோல்கள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பழ தோல் மென்மையாகும் வரை வேகவைக்கவும். சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாறு 1/2 கப் பிழிந்து, நன்கு கலக்கவும். இந்த கலவையை காற்று புகாத பாட்டிலில் எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். சில மணி நேரங்களுக்கு பின்னர் எடுத்து பார்த்தால் நீங்கள் ஜெல்லி போன்ற நிலைத்தன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் அதை ஒரு சிற்றுண்டியாக அல்லது பிரட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    பேக்கரி பொருட்களுக்கு சுவைக்கு சேர்க்கவும்

    நீங்கள் வீட்டில் பேக்கரி பொருட்களை தயாரிக்க விரும்பினால் இந்த மீதமுள்ள ஆப்பிள் தோல்கள் வாஃபிள்ஸ், மஃபின், கேக் அல்லது டார்ட்ஸ் போன்ற பொருட்களுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்கள் சில இலவங்கப்பட்டை சேர்த்து மேலும் ஒரு சிறந்த சுவையை பெறலாம்.

    ஸ்மூத்திகளில் சுவைக்காக சேர்க்கலாம்

    ஆப்பிள் தோல்களை ஒரு ஜிப் லாக் பையில் சேமிக்க முடியும். நீங்கள் அவற்றை ஃப்ரீசரில் வைத்திருந்து அதிக தோல்கள் சேர்ந்ததும் கூட பயன்படுத்தலாம். ஒரு பிளெண்டரில், ஸ்மூத்திக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து சில ஆப்பிள் தோல்களை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: