Home /News /lifestyle /

இரவில் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் : எவ்வாறு தவிர்ப்பது..?

இரவில் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் : எவ்வாறு தவிர்ப்பது..?

இரவில் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்

இரவில் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்

நீங்கள் ஒரு நாளில் பகல் பொழுதில் சரியான அளவு உணவை உட்கொள்ளவில்லை எனில் நீங்கள் அதற்கும் சேர்த்து இரவில் மிக அதிகமாக உணவை எடுத்துக் கொள்வீர்கள் மேலும் கண்ட கண்ட நேரங்களில் உணவு உட்கொள்வதோ அல்லது நொறுக்கு தீனி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் ஊட்டச்சத்துக்களின் சமநிலையையும் பாதிக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நம்மில் பலர் காலையிலும் மதியமும் குறைவான உணவை உட்கொண்டு, இரவு வேலையில் மிக அதிகமான உணவு எடுத்துக் கொள்கிறோம். இது கிட்டத்தட்ட தலைகீழான மற்றும் தவறான அணுகுமுறையாகும். இவ்வாறு அதிகமான உணவை எடுத்துக் கொள்ளும் போது குறிப்பாக இரவு நேரங்களில் அதை செய்யும்போது அவை உடலுக்கு பல்வேறு தீங்கினை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு இரவு நேரங்களில் அதிகமான உணவை உட்கொள்வதை உடல் எடை கூடுவதற்கு வழி வகுப்பதோடு, தீர்க்க முடியாத வியாதிகளான சர்க்கரை நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளை அதிகமாக்கும். சிலர் உணவு உட்கொள்வதே ஒரு வழக்கமாக மாற்றி வைத்துள்ளனர். அவர்கள் சோகத்திலோ அல்லது ஏதேனும் குழப்பத்திலோ இருக்கும்போது உணவு உட்கொள்வதின் மூலம் அவற்றை சரி செய்வதாக நினைத்து கொள்கின்றனர்.

வேறு சிலரோ தங்களுக்கு வேலை எதுவும் இல்லை எனும் நேரத்தில் வெறும் டைம் பாஸுக்காக உணவு உட்கொள்கின்றனர். இது நாளடைவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உங்கள் உயிருக்கே உலை வைக்கக்கூடும். எனவே சாப்பிடும் உணவில் சரியான ஊட்டச்சத்துக்களும் அந்த உணவானது சரியான அளவிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்கிறோம் என்பதற்கான அறிகுறிகள்:

1. வயிறு நிறைந்த பிறகும் சுவைக்காக இன்னும் அதிகமாக சாப்பிடுவது
2. உடலின் தேவைக்கேற்ப அதிக அளவில் தேவையற்ற உணவுகளை உட்கொள்வது
3. டைம் பாஸுக்காகவும், நம் எண்ணங்களை திசை திருப்புவதற்காகவும் உணவு உட்கொள்வதை ஒரு வழியாக தேர்ந்தெடுப்பது
4. உணவு உட்கொண்ட பிறகு ஒரு வகையான சோர்வு, அடிவயிற்றில் வலி, வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் ஆகியவை நாம் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்கிறோம் என்பதை தெரிவிக்கும் அறிகுறிகள் ஆகும்.

செயற்கை இனிப்பு சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்குமா..? ஆய்வு

இதை பற்றி பேசிய அஞ்சலி முகர்ஜி என்பவர் ”நீங்கள் ஒரு நாளில் பகல் பொழுதில் சரியான அளவு உணவை உட்கொள்ளவில்லை எனில் நீங்கள் அதற்கும் சேர்த்து இரவில் மிக அதிகமாக உணவை எடுத்துக் கொள்வீர்கள் மேலும் கண்ட கண்ட நேரங்களில் உணவு உட்கொள்வதோ அல்லது நொறுக்கு தீனி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் ஊட்டச்சத்துக்களின் சமநிலையையும் பாதிக்கும். இது நேரடியாக நீரிழிவு நோய் இதய கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே மொத்தமாக மூன்று வேளை உணவு உட்கொள்வதை தவிர்த்து ஐந்து முதல் ஆறு முறை வரை உணவை சிறிது சிறிதாக உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.இரவில் அதிகமான உணவை உட்கொள்வதை தவிர்க்கும் வழிமுறைகள்:

1. காலை உணவை புரதச்சத்து நிறைந்ததாக மாற்றிக் கொள்ளுங்கள்
2. சரியான புரதச்சத்துக்களுடன் கூடிய உணவை சீரான இடைவெளியில் நாள் தவறாமல் உட்கொள்ளுங்கள்
3. ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு எடுத்துக் கொள்வதற்கு பதிலாக அவற்றை ஐந்து முதல் ஆறு முறைகளாக மாற்றி சிறிது சிறிதாக உணவை உட்கொள்ளலாம்.

டைனிங்கை விட சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதுதான் நல்லது : விளக்கும் ஊட்டச்சத்து நிபுணர்...

இந்த சிறிய அளவு சாப்பாட்டு மெனுவில் பழங்கள் காய்கறிகள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

1. வெள்ளரிக்காய் ஜூஸ்
2. தக்காளி ஜூஸ்
3. புதினா அல்லது கொத்தமல்லி சேர்த்த கேரட் ஜூஸ்
4. இயற்கை தானியங்களை உள்ளடக்கிய சாண்ட்விச்
5. சப்பாத்தியும் காய்கறிகளும்
5. சூப்புகள்
6. முளைக்கட்டிய பயிர் வகைகள்
7. அவித்த முட்டை
8. தானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கட்டுகள்
9. இட்லி
10. வறுத்த சிக்கன்
12. வறுத்த மீன் ஆகியவற்றை சிறிய அளவு சாப்பாடுகளுக்கு ஏற்றம் மெனுவாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food

அடுத்த செய்தி