நீங்கள் அதிகம் சாப்பிடுவதாக நினைக்கிறீர்களா..? கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இதோ..!

மாதிரி படம்

மன அழுத்தம், வெறுப்பு, கோபம் மிகுதியாக இருக்கும் சமயங்களிலும் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று நம்மால் கணிக்க முடியாது.

  • Share this:
ஏதாவதொரு நாளில் நமக்கு பிடித்த உணவு கிடைத்துவிட்டால், மகிழ்ச்சியில் அன்லிமிட்டெட்டாக சாப்பிடுவோம். ஒரு சிலர் எந்த உணவாக இருந்தாலும், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற வரைமுறையே இல்லாமல் வெளுத்து வாங்குவார்கள். அவர்களிடம் கேட்டால், எனக்கே தெரியவில்லை ஏன் இவ்வளவு சாப்பிடுக்கிறேன்? என்று சொல்வார்கள்.

மன அழுத்தம், வெறுப்பு, கோபம் மிகுதியாக இருக்கும் சமயங்களிலும் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதியாக உணர்வு இருப்பவர்கள், அளவாக சாப்பிடுவதற்கு 4 சூப்பரான டிப்ஸை பாலோ செய்தால், இந்த உணவு கட்டுப்பாடு இயல்பாக வந்துவிடும்.

மெதுவாக சாப்பிடுங்கள்

நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்து சாப்பாடு என்பதால், நாள்தோறும் அதனை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். மெதுவாக சாப்பிட்டால் மட்டுமே சாப்பாட்டின் முழு சுவையையும் உணர முடியும். ஆனால், வேலை மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் அவரச கதியில் சாப்பிடுவதால், நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற வரைமுறையே இல்லாமல் சாப்பிடுவோம். நிபுணர்களின் கூற்றுப்படி, மெதுவாக சாப்பிடும்போது திருப்தியாகவும், நிறைவாகவும் சாப்பிட்டதுபோல் உணர்வீர்கள். பசி குறித்த தகவலை மூளைக்கு அனுப்ப குடல் 5 முதல் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் என கூறும் நிபுணர்கள், மெதுவாக சாப்பிடும்போது குடலும் சரியான தகவலை மூளைக்கு அனுப்பும். இதனால் நாள்தோறும் போதுமான அளவு மட்டுமே சாப்பிடுவீர்கள்.கவனச் சிதறல் வேண்டாம்

சாப்பிடும்போது கவனம் சிறதறாமல் உண்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். செல்போன்களில் விளையாடிக்கொண்டே சாப்பிடுவது, கம்யூட்டர்களின் பணிபுரிந்து கொண்டே சாப்பிடுவது ஆகியவை அதிகமாக உணவை எடுத்துக்கொள்ள வழிவகுக்கும். மேலும், திரைபடங்கள் பார்க்கும்போது நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதும், உணவு கட்டுப்பாட்டுக்கு சரியாக இருக்காது. உணவில் கட்டுப்பாடு தேவை என்று விரும்பினால் இதனை கண்டிப்பாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

கோடைகாலத்தில் ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? இதனை எப்படி செய்யலாம்!

டைனிங் டேபிளில் மட்டுமே சாப்பிடுங்கள்

டைனிங் டேபிள் அல்லது சாப்பிடுவதற்கு என்று உங்கள் வீட்டில் இருக்கும் இடங்களில் மட்டும் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்போது, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள்? என்பது உங்களால் அறிந்து கொள்ள முடியும். மேலும், உணவை முழுமையாக ருசித்து உண்பீர்கள். புதுபுது இடங்களில் அமர்ந்து சாப்பிட்டால், சாப்பாடு எடுத்துக்கொள்வதில் வரைமுறை இருக்காது.புரோட்டின், நார்ச்சத்து உணவுகள்

புரோட்டின் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். எப்.டி.எ (FDA) - அறிக்கையின்படி, அதிகப்படியான நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காது மற்றும் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தடுக்கும். 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், காலையில் ஓட்மீல் சாப்பிட்டவர்கள் குறைவான பசியை மட்டும் உணர்ந்தார்கள். சோள மாவு மற்றும் தண்ணீரை எடுத்துக்கொண்டவர்கள் மதியம் அதிக உணவை எடுத்துகொண்டனர்.

புரோட்டின் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள்

முழு தானியங்கள், பீன்ஸ், பட்டாணி, பயறு, கீரைகள், சக்கரவள்ளிக் கிழங்கு, டிரைப் ப்ரூட்ஸ், விதைகள், ஓட்ஸ் ஆகியவற்றில் அதிகப்படியான நார்ச்சத்துக்களும், புரோட்டினும் இருக்கின்றன. 2 ஆயிரம் கிலோரி உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள், அன்றாடம் 25 கிராம் நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published: