Home » News » Lifestyle » FOOD HOW TO SAVE EXPENSIVE GROCERY FOODS WITH SIMPLE TIPS ESR

அதிக விலை கொடுத்து வாங்கும் இந்த சமையல் பொருட்களை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்..!

சற்று விலை அதிகம் என்றாலும் ஆரோக்கியம் மற்று சுவை என இரண்டும் கொண்டவை என்பதால் பரவாயில்லை என வாங்கிவிடுகின்றனர்.

அதிக விலை கொடுத்து வாங்கும் இந்த சமையல் பொருட்களை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்..!
சமையல் பொருட்கள்
  • Share this:
தற்போது இந்திய இல்லங்களில் காய்கறிகள் மட்டுமல்லாது சில பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களாக இடம் பிடித்துள்ளன. ஆனால் அவை சற்று விலை அதிகம் என்றாலும் ஆரோக்கியம் மற்று சுவை என இரண்டும் கொண்டவை என்பதால் பரவாயில்லை என வாங்கிவிடுகின்றனர். ஆனால் அவற்றை வீட்டிலேயேவும் செய்யலாம். அதுவும் குறைந்த விலையில்..! என்னென்ன பொருள் எப்படி என்று பார்க்கலாம்.

பனீர் : பனீர் பட்டர் மசாலா, பனீர் புலாவ், பிரியாணி என பனீரை வைத்து வகை வகையாக சமைத்து அசத்துகின்றனர். அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் தவறாமல் வாங்கிகொள்கின்றனர். ஆனால் அதை வீட்டிலேயே எளிதில் செய்யலாம்.

1லி பாலை நன்குக் காய்ச்சி அதில் அரை மூடி எலுமிச்சையை பிழிந்து விட்டால் பால் திரி திரியாக வந்துவிடும். அதை அப்படியே ஒரு துணியில் ஊற்றி தண்ணீரை இறுத்துவிட்டால் திரிந்த கட்டிகள் மட்டும் தேங்கியிருக்கும். பின் அப்படியே துணியை மூட்டை போல் கட்டி அதன் மேல் எடை அதிகமான பொருளை வைத்து அரை மணி நேரம் விட்டு விடுங்கள். பின் திறந்து பார்த்தால் கட்டியாக பஞ்சு போல் மாறிவிடும். அதை அப்படியே சிறு துண்டுகளாக நறுக்கி பாக்ஸில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.




பச்சை பட்டாணி : உரித்த பட்டாணியே கிடைக்கிறதே என பார்த்ததும் வாங்கிவிடுகிறோம். ஆனால் விலை அதிகம் கொண்டது மட்டுமல்லாமல் பதப்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிடுகிறோம். அதை வீட்டிலேயே செய்யலாம்.

கடைகளில் இயற்கையான பட்டாணி தோலோடு இருக்கும். அதை கிலோ கணக்கில் வாங்கி ஓய்வாக இருக்கும்போது உரித்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடு பின் பட்டாணியை அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுத்து தண்ணீரை இறுத்துவிடுங்கள். அதை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம்.இதே போல் உரிக்காத  மக்காசோளம் வாங்கி உரித்து வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முளை கட்டிய தாணியங்கள் : முளை கட்டிய தாணியங்களையும் சமையலுக்கும், சாலட் செய்து சாப்பிடவும் ரெடிமேடாக வாங்குகிறோம்.

பிடித்த தானியங்களை கிலோ கணக்கில் வாங்கிக்கொண்டு அதை ஒரு இரவு ஊற வைத்துப் பின் தண்ணீரை இறுத்துவிடுங்கள். பின் ஈரத்துணியில் போட்டு சுருட்டி வைக்க மறுநாள் முளைக்கட்டிய தானியங்களாக மாறிவிடும். அதை அப்படியே சமையலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.



நெய் : நெய்யும் தற்போது அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. அதில் பல வகையான உடல் ஆரோக்கியங்களும் உள்ளன.

நெய் வாங்குவதற்கு பதிலாக வெண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். அதை கடாயில் போட்டு உருக்கிக்கொள்ளுங்கள். வாசனைக்கு முருங்கைக் கீரை கொஞ்சம் தூவுங்கள். நன்கு உருகியதும், வடிகட்டி டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். விலையும் மிச்சம்.










பார்க்க :

 

 
First published: April 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading