குக்கரில் வடிக்கும் சாதம் உதிரியாக இருக்க சூப்பரான டிப்ஸ் இதோ..

குண்டானில் வடிக்கும் சாதமும் உதிரியாக இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க.

குண்டானில் வடிக்கும் சாதமும் உதிரியாக இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க.

 • Share this:
  அடுப்பில் உலை வைத்து சாதம் வடித்ததெல்லாம் இன்றைய தலைமுறையினரிடம் மலையேறிவிட்டது. அவசர உலகில் நொடியில் அனைத்தும் நடந்துவிட வேண்டும். அந்த வரிசையில்தான் இந்த உணவு விஷயமும். குக்கரில் கழுவி வைத்துவிட்டால் போதும் 10 நிமிடங்களில் உணவு ரெடி. ஆனால் என்னதான் இந்த குக்கர் சாதம் வசத்திக்கேற்றார்போல் இருந்தாலும் குண்டானில் உலை வைத்து வடிக்கும் பக்குவம் இல்லை என்பது பெரும்பாலானோரின் கருத்து. அதற்கு என்ன காரணம்..? ஏன் அப்படி வர என்ன செய்ய வேண்டும்..?

  குண்டானில் வடிக்கும் சாதத்திற்கு உலை வைக்கும்போதே புழுங்கல் அரிசியையும் ஊற வைத்துவிடுவோம். அது நன்கு ஊறி உப்பி உதிரி உதிரியாக வரும். குக்கரில் வைப்போர் அப்படியில்லாமல் அவசர அவசரமாக கழுவி உடனே வைத்துவிடுவார்கள்.

  எனவே அரிசியை நன்கு ஊற வைத்து பின் கழுவி வேக வையுங்கள். கழுவும்போது முதலில் ஊற்றும் தண்ணீரில் நன்கு அலசிக்கொள்ளுங்கள். அந்த தண்ணீரை இறுக ஊற்றியதும் தண்ணீர் இல்லாமலேயே கைகளால் பிசைந்தவாறு கழுவுங்கள். பின் மீண்டும் தண்ணீர் பிடித்து அலசுங்கள். அந்த தண்ணீரை இறுத்துவிட்டு மீண்டும் தண்ணீர் பிடித்து அலசுங்கள்.

  Also Read : நீங்கள் சிக்கன் பிரியரா..? தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்துகளையும் தெரிந்துகொள்ளுங்கள்...

  இப்படி 3 முறை அலசிவிட்டு 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் வைக்க வேண்டும். எந்த டம்ளரில் அரிசியை அளந்தீர்களோ அதே டம்ளரில்தான் தண்ணீர் வைக்க வேண்டும்.

     குக்கரில் தண்ணீர் ஊற்றியதும் அதில் சமையல் எண்ணெய் 1 ஸ்பூன் விடுங்கள். பின் ரப்பர், பிரஷர் குக்கர் மூடி போட்டு மூடிவிடுங்கள். விசில் போடாமல் மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வையுங்கள்.

  Also Read: தினை உணவு இதய நோய் அபாயத்தை குறைக்கிறது - ஆய்வில் மகிழ்ச்சி தகவல்..!

   

  குக்கரில் தண்ணீர் பிரஷர் அடிக்கும்போது விசில் போட்டு மூடுங்கள். விசில் 3 முறை சத்தம் விட்டதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பின் உடனே குக்கர் மூடியை திறக்காமல் அடுப்பிலேயே விட்டுவிடுங்கள்.அதன் பிரஷர் தானாக இறங்கிய பிறகு குக்கர் மூடியை திறங்கள்.

  தற்போது கரண்டியால் சாதத்தை கிளறிப்பாருங்கள். பூப்போல சாதம் வெந்திருக்கும். இந்த குறிப்பு : பயன்படுத்துவது புதிய அரிசியாக இருப்பின் 2 1/2 டம்ளர் தண்ணீர் வைத்தால் போதுமானது. பழைய அரிசியாக இருந்தா 3 டம்ளர் ஊற்றலாம்.
   Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: