Home /News /lifestyle /

சமைக்கும் போது உணவின் ஊட்டச்சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாப்பது எப்படி?

சமைக்கும் போது உணவின் ஊட்டச்சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாப்பது எப்படி?

காட்சி படம்

காட்சி படம்

இயற்கையாக பழுத்த பழங்ககளை வாங்க முயற்சிக்கவும்..இதே போல வேறு என்னென்ன செய்வது நல்லது?

ஃப்ரெஷ் ஆன காய்கறிகள் மற்றும் பழங்கள், தரமான மளிகை சாமான்கள் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் தின்பண்டங்களை வாங்கி - சமைத்து - சாப்பிடுவது மட்டுமே உங்களின் ஆரோக்கியத்திற்கு போதுமானதாக இருந்து விடாது. நீங்கள் உட்கொள்ளும் போது அவற்றில் நிரம்பி உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதில் ஒரு பயனும் இல்லை.

நீங்கள் சமைக்கும் வரை மற்றும் சமைத்த பிறகும் கூட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் தக்கவைக்கப்படுகின்றன. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை பாதுகாக்க அவற்றை சரியான முறையில் 'ஸ்டோர்' செய்து வைப்பதும் மிகவும் முக்கியம். நீங்கள் சில உணவுப் பொருட்களை சமைக்கும்போதும் கூட இது பொருந்தும்.

உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை 'பிரேக் டவுன்' செய்யும் போது நேரம் மிகவும் முக்கியமான ஒரு காரணியாகும். எனவே நீங்கள் வாங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் ஃப்ரெஷ் ஆக, உள்நாட்டில் வளர்க்கப்பட்டவையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதலாக, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தவிர்த்து, இயற்கையாக பழுத்த பழங்ககளை வாங்க முயற்சிக்கவும்; இதே போல வேறு என்னென்ன செய்வது நல்லது?

Also read : ஏதாவது சாப்பிடனும் போல் உள்ளது என கேட்குக் குழந்தைகளுக்கு இந்த பிரெட் ரோல் செய்து கொடுங்கள்..

பெரும்பாலும் குளிர்ந்த சூழலை தேர்வு செய்யவும்!

வாங்கிய ரேஷனை கார் அல்லது ஸ்கூட்டர் டிக்கியில் வைத்து கொண்டு வரும் போது, கொஞ்சம் விரைவாக செயல்பட வேண்டும். அவற்றை அதிக நேரம் அங்கேயே வைக்காமல் இருப்பது நல்லது.

சில காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் போது ஊட்டச்சத்துக்களை சிறப்பாக சேமிக்கின்றன. ஆனால் உருளைக்கிழங்கு, வெங்காயம், உரிக்கப்படாத பூண்டு மற்றும் பிற வேர் சார்ந்த காய்கறிகள் ஆனது உலர்ந்த, குளிர்ந்த இடங்களில் தான் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக சேமிக்கும்.

முடிந்தவரை ஒரு வாரம் அல்லது அதற்கு மேலாக தேவைப்படும் காய்கனிகளை வாங்கி சேமிப்பதற்கு மாறாக ஒவ்வொரு நாளும் புதிதாக வாங்கவும்.

also read : வெற்றிலையை வச்சி இப்படியொரு உற்சாக பானமா? ‘பான் ஷாட்’  ட்ரை பண்ணி பாருங்க..

காய்கனிகளும் சுவாசிக்க வேண்டும்!

சில பழங்கள், காளான்கள் மற்றும் காய்கறிகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகள் அல்லது செலோபேன்-கவர்டு பிளாஸ்டிக் பாக்ஸில் வருகின்றன. அவைகளை வெளியே எடுத்து காகிதப்பைகளில் வைக்கவும் அல்லது பிளாஸ்டிக் பைகளுக்குள் கொஞ்சம் காற்றுபோகும்படி சில ஓட்டைகளை போடவும்.

சில நேரங்களில் 'ப்ரீஸிங்' ஆவதும் நல்லதே!

பட்டாணி போன்ற காய்கறிகளை ஒரு சில நாட்களில் உட்கொள்ளாமல், அதை ப்ரீஸ் செய்து உட்கொண்டால் அதன் நன்மைகள் அதிகரிக்கும். உறைந்த காய்கறிகளும் கூட சத்தானவையே, ஆனால் அவைகளை ஃப்ரெஷ் ஆக வாங்கியவுடன் 'பிளான்ச்' செய்து உடனடியாக ப்ரீஸ் செய்ய மறக்க வேண்டாம்.

வேறு என்னென்ன செய்யலாம்?

  • ஒரே உணவை பலமுறை சூடுபடுத்துவதைத் தவிர்க்கலாம்.

  • காய்கறிகளை வேகவைக்க நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரை மற்ற உணவுகளில் ஸ்டாக்காகப் பயன்படுத்தலாம்.

  • பருப்பு போன்ற சில உணவுகளை நீண்ட நேரம் மற்றும் நிறைய தண்ணீர் ஊற்றி சமைப்பதை தவிர்க்கலாம்.

  • முடிந்தவரை காய்கறிகளை 'பொடிசு பொடிசாக' நறுக்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் வெளியேறும் வாய்ப்புகள் அதிகம்.


 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Cooking tips

அடுத்த செய்தி