மட்டன் மாங்காய் குழம்பு சாப்பிட்டுருகீங்களா.. இதோ ரெசிபி..

மட்டன் மாங்காய் குழம்பு சாப்பிட்டுருகீங்களா.. இதோ ரெசிபி..

சூடான சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாங்காய் - மட்டன் குழம்பு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • Share this:
    பொதுவாக கோடைக்காலத்தில் மாங்காய் அதிகமாக கிடைக்கும். அந்த மாங்காயை நாம் எல்லோரும் மழைகாலத்திற்கு ஏற்றவாறு ஊறுகாய் அல்லது மாங்காய் வற்றல்தான் போட்டு வைப்போம். ஆனால் கிராமங்களில் இந்த மாங்காய்களில் மீன் மற்றும் மட்டன் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். சுவையான மாங்காய் மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    1. மட்டன் - 200 கிராம்

    2. இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    3. கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்

    4.மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    5.பச்சை மிளகாய் - 5

    6.நல்லெண்ணெய் - தேவையான அளவு

    7.மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

    8.மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

    9. உப்பு - தேவையான அளவு

    10.கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    11.மாங்காய் - கால்பகுதி மாங்காய் (நறுக்கவும்)

    செய்முறை

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அத்துடன் மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது பாதியளவு, மிளகாய்த்தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    அதன் பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், மல்லித்தூள் மஞ்சள்தூள், மாங்காய்த் துண்டுகள் போட்டு வதக்கவும்.

    மாங்காய் நன்றாக வெந்ததும கடைசியில் வேக வைத்த மட்டனைப் போட்டுப் புரட்டி அடுப்பை நிறுதவும். அதன்மேல்  கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: