காலை உணவாக இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க...
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
பொட்டு கடலை – 3 ஸ்பூன்
தேங்காய் – கால் மூடி
பூண்டு – 6 பல்
இஞ்சி சிறிய துண்டு – 1
பச்சை மிளகாய் – 5
கிராம்பு – 3
பட்டை சிறிய துண்டு – 1
சோம்பு – 1 ஸ்பூன்
கல்பாசி – அரை ஸ்பூன்,
முந்திரி – 4
எண்ணெய் – 5 ஸ்பூன்
உப்பு – ஒன்றரை ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்த மல்லி தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்சியில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும். காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.
மேலும் படிக்க... சுவையான மட்டன் ரத்த பொரியல்!
மட்டன் மூளை வறுவல் செய்ய ரெசிபி!
மணமணக்கும் மட்டன் சால்னா செய்வது எப்படி தெரியுமா?
மதுரை மட்டன் இட்லி செய்ய ரெசிபி!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food